ஆயுத மோதலின் இறுதி மாதங்களில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட “கொடூரமான குற்றங்களை” உலகம் நினைவுகூர்கிறது என அவுஸ்திரேலிய செனட்டர் டேவிட் ஷூபிரிட்ஜ் (David Shoebridge) தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய செனட் சபையில் இடம்பெற்ற ‘தமிழ் இனப்படுகொலை நினைவு வார’ விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“சுமார் 3 இலட்சம் மக்கள் பாதுகாப்பான வலயம் எனப்பட்ட பகுதிக்குள் முடக்கப்பட்டு, குண்டுவீச்சுகள் மற்றும் பீரங்கித் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர்.
தமிழ் இனப்படுகொலை என்பது 2009 ஆம் ஆண்டில் ஒரேயொரு நாளில் மட்டும் நடந்துவிடவில்லை.
அது பல தசாப்தங்களாக நிகழ்ந்ததுடன், தற்போதும் தொடர்கிறது என்று அவுஸ்திரேலிய செனட்டர் டேவிட் ஷூபிரிட்ஜ் (David Shoebridge) தெரிவித்துள்ளார்.



