அவுஸ்திரேலியாவில் விடுவிக்கப்பட்ட அகதிகள்: தற்காலிக விசா நிரந்தர தீர்வாகுமா?

கடந்த மார்ச் 1ம் திகதி, தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் அவுஸ்திரேலியாவின் கங்காரூ பாய்ண்ட் தங்கும் விடுதியில் இருந்தும் பிரிஸ்பேர்ன் குடிவரவு இடைத்தங்கல் முகாமிலிருந்தும் 25 அகதிகள் அல்லது தஞ்சக்கோரிக் கையாளர்கள் விடுவிக்கப் பட்டிருக்கின்றனர்.

அந்த வகையில், கடந்த ஜனவரி 20ம் திகதி முதல் இதுவரை 115 அகதிகள் அல்லது தஞ்சக் கோரிக்கையாளர்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்றதாக சுமார் 8 ஆண்டுகளாக கடல் கடந்த தடுப்பிலும் அவுஸ்திரேலியாவில் உள்ள தடுப்பு முகாம்களிலும் சிறைவைக்கப் பட்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் அகதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள 6 மாத விசா என்பது தற்காலிக இறுதிப் புறப்பாடு விசா மட்டுமே ஆகும். இதன் மூலம் இந்த அகதிகளுக்கு ஒருபோதும் அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிப்பதற்கான உரிமைகளை இந்த அகதிகளால் பெற முடியாது. இவ்விசாவின் அடிப்படையில் அவர்கள் எதிர்காலம் குறித்து ஆராய்ந்தால், வேறொரு நாட்டில் நிரந்தரமாக மீள்குடியேறுவது அல்லது சொந்த நாட்டுக்கு மீண்டும் திரும்புவது என்ற வாய்ப்புகள் மட்டுமே அவர்கள் முன் உள்ளது.