அழிவடைந்த பழமை வாய்ந்த ஆலயம்;மீளமைக்கும் பணிகள் ஆரம்பம்

மட்டக்களப்பு-பொலநறுவை எல்லைப்பகுதியில் கடந்த யுத்த சூழ்நிலை காரணமாக அழிவடைந்த பழமைவாய்ந்த பிள்ளையார் ஆலயமான வெள்ளிமலை பிள்ளையார் ஆலயத்தினை மீள அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு-பொலநறுவை எல்லைப்பகுதியான வெலிக்கந்தையில் சுமார் இரு நூறு வருடங்களுக்கு முன்னர் குறித்த ஆலயத்தில் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எனினும் கடந்த 30வருடகால யுத்த சூழ்நிலை காரணமாக குறித்த ஆலயம் வழிபாடுகள் இன்றி கைவிடப்பட்டிருந்த நிலையில் ஸ்ரீரமணமகரிசி அறப்பணி நிலைய தலைவர் மா.செல்லத்துரை மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக குறித்த ஆலயம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.03 1 அழிவடைந்த பழமை வாய்ந்த ஆலயம்;மீளமைக்கும் பணிகள் ஆரம்பம்

குறித்த ஆலயம் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று காலைஸ்ரீரமணமகரிசி அறப்பணி நிலைய தலைவர் மா.செல்லத்துரை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

குறித்த ஆலயத்தினை அமைப்பதற்கு இந்துக்கலாசார அலுவல்கள் திணைக்களம் முதல் கட்டமாக ஐந்து இலட்சம் ரூபாவினை வழங்கியுள்ளது.