‘அம்மா நலமா’ திரைப்பட இயக்குநர் கேசவராஜன் இயற்கை எய்தினார்

ஈழத்து திரைப்பட இயக்குநரும்,தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதர்சனம் பிரிவைச் சேந்தவருமான திரு நவரட்ணம் கேசவராஐன் அவர்கள் இன்று (09.01.2021)  அதிகாலை மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார்.

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், தற்காலிகமாக சுதுமலையில் வசித்து வருபவருமான நவரட்ணம் கேசவராஜன், 1986ஆம் ஆண்டு ‘தாயகமே தாகம்’, ‘மரணம் வாழ்வின் முடிவல்ல’ போன்ற படங்களை இயக்கியிருந்தார். இதற்காக தேசியத் தலைவர் அவர்களின்  பாராட்டைப் பெற்றதுடன், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டார்.

பல வீதி நாடகங்கள், மேடை நாடகங்கள் போன்றவற்றை தயாரித்து வழங்கியதுடன், ‘பிஞ்சுமனம்’, ‘திசைகள் வெளிக்கும்’, ‘கடலோரக் காற்று’, ‘அம்மா நலமா’ போன்ற படங்களை இயக்கியிருந்தார்.

மேலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வலியை உணர்த்தும் ‘அப்பா வருவார்’ போன்ற பல குறும்படங்களை இயக்கியும், நடித்தும் வந்துள்ளார்.

அத்துடன் 2009இன் பின்னர் முன்னாள் போராளிகள், பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மையப்படுத்தி ‘பனைமரக்காடு’ என்ற திரைப்படத்தையும் இயக்கியிருந்தார்.

இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார்.