அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோர்ஜியாவில் மறுவாக்கு எண்ணிக்கை

03ஆம் திகதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. அத்துடன் உடனுக்குடன் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டவாறே உள்ளன.

இதேவேளை, ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பிடன் மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளரும் தற்போதைய அதிபருமான ட்ரம்ப் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. அலாஸ்கா, நெவாடா, வட கரோலினா, பென்சில்வேனியா உள்ளிட்ட மாகாணங்களில் தேர்தல் முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.

ஜோர்ஜியா மாகாணத்தில் இருவருக்கும் இடையே பெரிய அளவில் வாக்குகள் வித்தியாசமின்றி இழுபறி நீடித்து வந்த நிலையில், தற்போது ஜோ பிடன் ட்ரம்ப்பை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் இருக்கின்றார்.

இதனையடுத்து ஜோர்ஜியாவில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த ட்ரம்ப் தரப்பில் நீதிமன்றில் முறையிடப்பட்டது. இந்த வழக்கை நீதிமன்றம் நிராகரித்தது, ஜோர்ஜியா மாகாண அரசு மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டுள்ளது.