அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பிடனுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடனுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன. ட்ரம்ப்பை விட ஜோ பிடன் 50 தொகுதிகளில் மேலதிகமாக வெற்றியீட்டியிருப்பதாக அறிவிக்கப்படுகின்றது.

இதுவரை வெளியான முடிவுகளின்படி, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் 264 இடங்களைக் கைப்பற்றியுள்ளார். குடியரசுக் கட்சி வேட்பாளர் 214 இடங்களைக் கைப்பற்றியுள்ளார்.

ஜோ பிடன் கலிபோர்னியா மாகாணத்தில் 55 இடங்களிலும் நியூயோர்க் மாகாணத்தில் 29 இடங்களையும் கைப்பற்றியுள்ளார். மேலும் தலைநகர் வோஷிங்டனில் 12 இடங்களிலும், அரிசோனா மாகாணத்தில் 11 இடங்களிலும், உரேகான் மாகாணத்தில் 7 இடங்களிலும், கொலராடோ மாகாணத்தில் 9 இடங்களிலும், இல்லினாய்ஸ் மாகாணத்தில் 20 இடங்களிலும் வேர்ஜினியா மாகாணத்தில் 13 இடங்களிலும், மிச்சிகன் மாகாணத்தில் 16 இடங்களிலும், ஹவாய் மாகாணத்தில் 4 இடங்களிலும்  ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார். அத்துடன் முடிவுகள் வெளிவராத நெவாடா மாகாணத்திலும் முன்னிலையில் உள்ளார்.

குடியரசுக் கட்சி வேட்பாளர் ட்ரம்ப் டெக்சாஸ் மாகாணத்தில் 38 இடங்கள் கிடைத்துள்ளன. லூசியானாவில் 8 இடங்களிலும், ஓகியோ மாகாணத்தில் 18 இடங்களிலும், அலபாமா மாகாணத்தில் 9 இடங்களிலும், இன்டியானா மாகாணத்தில் 11 இடங்களிலும், டென்னஸ்சி மாகாணத்தில் 11 இடங்களிலும், கெண்டக்கி மாகாணத்தில் 8 வாக்குகளையும், மிசௌரி மாகாணத்தில் 10 இடங்களிலும் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அத்துடன் முடிவுகள் வெளிவராத வட கரோலினா, ஜார்ஜியா, பென்சில்வேனியா ஆகிய மாகாணங்களில் ட்ரம்ப் முன்னிலையில் உள்ளார்.