அமெரிக்காவில் கறுப்பினத்தவர் மீது பொலிசார் சுட்டதை கண்டித்து போராட்டம்

அமெரிக்காவின் விகான்சின் மாநிலத்தில் ஞாயிறு அன்று , உள்ளுர் பிரச்சினை காரணமாக ஜக்கப் பிளேக் என்ற கறுப்பினத்தவரை பொலிசார் சரமாரியாக சுட்டனர். இதனைக் கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் கலவரம் வெடித்துள்ளது.

ஞாயிறு அன்று  நடைபெற்ற இந்த சம்பவத்தில், ஜக்கப் பிளேக் என்ற கறுப்பினத்தவர் தனது குழந்தைகள் உள்ள காரை திறந்து உள்ளே ஏற முற்பட்ட போது பொலிசார் அவரை நோக்கி 7 முறை துப்பாக்கியால் சுட்டனர். வாகனத்தில் அவரின் 3, 5 மற்றும் 8 வயது குழந்தைகள் இருந்தனர். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர் திங்கட்கிழமை தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாக அவரின் வழக்கறிஞர் கூறினார். இதனையடுத்து கோபமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தெருக்களில் ஒன்றுகூடினர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிசாரைக் கண்டித்தும், நிறவெறிக்கு எதிராகவும் போராட்டங்களில் ஈடுபட்ட போது அது வன்முறையாக வெடித்தது. இதில் பல கட்டிடங்கள் அடித்து நொருக்கப்பட்டன. வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த விசாரணை நடைபெற்று வருகின்றது.