அமெரிக்காவில் அனைவரையும் கவர்ந்த றோபோ இராணுவ வீரர்

அமெரிக்காவின் மாசாசூசெட்டில் உள்ள றோபோ தயாரிப்பு நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ள றோபோ இராணுவ வீரர் அனை அனைவரினதும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பாஸ்டன் டைனமிக்ஸ் என்னும் அந்த நிறுவனம், பல்வேறு வகையான றோபோக்களை உருவாக்கி வருகின்றது. தற்போது அட்லஸ் என்னும் இராணுவ வீரர் றோபோவையும், ஸ்பாட் என்னும் நாய் றோபோவையும் உருவாக்கியுள்ளது. அந்த றோபோக்களை மையமாகக் கொண்டு, லொஸ் ஏஞ்சல்சைச் சேர்ந்த காரிடர் டிஜிட்டல் என்னும் நிறுவனம், புதிய வகை வீடியோவை தயாரித்து வெளியிட்டள்ளது.

அந்த வீடியோவில் அட்லஸ் றோபோ, தம்மீதான தாக்குதல்களை சமாளித்துக் கொண்டு, பொம்மை இலக்குகளை சரமாரியாக துப்பாக்கியால் சுடுவது போன்ற பல்வேறு சாகசங்களைச் செய்கின்றது.

நாய் றோபோவான இலக்கைச் சுடும்படி கூறும் போது, அதற்குக் கட்டுப்படாமல், அருகில் இருப்போரை தாக்குகின்றது. பின்னர் நாய் றோபோவை தூக்கிக் கொண்டு பல அடி உயர மலை உச்சியில் இருந்து குதித்து தப்பிச் செல்லும் காட்சியும் உள்ளன.

உண்மையிலேயே தத்துரூபமாக இருக்கும் வகையில் வீடியோ காட்சிகள் உள்ளன. யூ ரயூப்பில் வெளியாகியுள்ள இக்காட்சியை இதுவரை 20 இலட்சம் பேர் கண்டு ரசித்தள்ளனர்.