அனைத்துலக நாணய நிதியத்தின் உதவிகளில் தங்கியிருக்கும் பாக்கிஸ்தான்

எதிர்வரும் சில வருடங்களுக்கு பாக்கிஸ்தான் அனைத்துலக நாணய நிதியத்தின் நிதி உதவிகளில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என அமெரிக்கவைத் தளமாகக் கொண்ட பிற்ஸ் தரப்படுத்தும் நிறுவனம் கடந்த வியாழக்கிழமை (25) தெரிவித்துள்ளது.

Parkistan IMF அனைத்துலக நாணய நிதியத்தின் உதவிகளில் தங்கியிருக்கும் பாக்கிஸ்தான்எதிர்வரும் மாதம் 8 ஆம் நாள் பாக்கிஸ்தானில் தேர்தல் நடைபெறவுள்ளது. இலங்கையிலும் தேர்தல் இந்த வருடம் இடம்பெறவுள்ளது. இந்த நாடுகள் தற்போது அனைத்துலக நாணயநிதியத்தின் உதவிகளில் தான் தங்ஙியிருக்கின்றன. எனவே தேர்தல் முடிவுகள் இந்த உதவிகளில் மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

தேர்தல்களின் போது ஏற்படும் உறுதியற்ற தன்மைகள் மற்றும் தேர்தல் முடிவுகள் இந்த உதவிகளில் தாக்கங்களை ஏற்படுத்தலாம். ஆசிய பிராந்தியத்தில் இந்தியா, கொரியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் தேர்தல்கள் இடம்பெறவுள்ளன.

மந்தமான உலக பொருளாதார வளர்ச்சி, சீனாவின் வீட்டுவிலை வீழ்ச்சி மற்றும் பூகோள அரசியல் நெருக்கடிகள் உள்ளபோதும் ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகளின் பொருளாதாரம் இந்த வருடம் தாக்குப்பிடிக்கும் நிலையிலேயே உள்ளது என அது மேலும் தெரிவித்துள்ளது.