அதி­கா­ரப்­ப­கிர்வு  குறித்து பேசி பய­னில்லை,பெரும்­பான்மை  மக்கள் எதிர்க்கும் விட­யத்தை  நடைமுறைப்­ப­டுத்த முடி­யாது – சிறிலங்கா அரச தலைவர்

சமஷ்டி, அதி­கா­ரப்­ப­கிர்வு என்று கூறி மக்­களை தொடர்ந்தும் ஏமாற்ற முடி­யாது. கடந்த 70 வரு­டங்­க­ளாக  அதி­கா­ரப்­ப­கிர்வு குறித்து கூறியே மக்கள் ஏமாற்­றப்­பட்­டுள்­ளனர். பெரும்­பான்மை மக்கள் விரும்­பா­ததை செய்ய முடி­யாது. பெரும்­பான்மை  மக்கள் எதிர்க்கும் விட­யத்தை  நடைமுறைப்­ப­டுத்த முடி­யாது.

 

இதனைத்  தெரிந்­து­கொண்டும் அர­சியல் தலை­வர்கள் மக்­களை  ஏமாற்றி வந்­துள்­ளனர். அபி­வி­ருத்­தியின் மூலமே இனங்­க­ளுக்­கி­டையில் ஒற்­று­மை­யையும் சமா­தா­னத்­தையும் ஏற்­ப­டுத்த முடியும்.   அதி­கா­ரப்­ப­கிர்வு குறித்து பேசி பய­னில்லை. அபி­வி­ருத்­தியின் ஊடா­கவே இன ஐக்­கி­யத்தை  ஏற்­ப­டுத்­தலாம் என்று சிறிலங்கா அரச தலைவர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி  செய­ல­கத்தில் தேசிய பத்­தி­ரி­கை­களின் ஆசி­ரி­யர்­களை  ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக்ஷ சந்­தித்து  நேற்று கலந்­து­ரை­யா­டினார்.  இந்த  கலந்­து­ரை­யா­டலில்  ஜனா­தி­ப­தியின்  ஊடக பணிப்­பாளர் மொஹான் சம­ர­நா­யக்­கவும் கலந்­து­கொண்டார்.  இங்கு  கேள்­வி­க­ளுக்கு  பதி­ல­ளிக்­கை­யி­லேயே சிறிலங்கா அரச தலைவர் இவ்­வாறு  தெரி­வித்தார்.

கோத்­த­பாய மேலும் கருத்து தெரி­விக்­கையில்  கூறி­ய­தா­வது;

இனங்­க­ளுக்­கி­டையே  ஒற்­றுமை  மற்றும் நல்­லி­ணக்கம் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டு­மானால்  நாட்டின் பாது­காப்பு என்­பது உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும்.  நாட்டின்  பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­தா­விட்டால்  இனங்­க­ளுக்­கி­டையே ஒற்­றுமை  மற்றும் சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்த முடி­யாது. பாது­காப்பு செய­லா­ள­ராக  நான் முன்னாள் இரா­ணுவ அதி­கா­ரியை நிய­மித்­தி­ருக்­கின்றேன். புல­னாய்வு   பிரி­வி­ன­ரையும்  பலப்­ப­டுத்­தி­யுள்ளேன்.  முப்­படைத் தள­ப­தி­க­ளுக்கும் உரிய பணிப்­பு­ரை­களை  விடுத்­தி­ருக்­கின்றேன். நாட்டின் பாது­காப்பை  உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு   செயற்­திட்­டங்கள்  மேற்ெள்­ளப்­பட்­டுள்­ளன.

ஜனா­தி­ப­தி­யாக பதி­யேற்­ற­பின்னர் ஆற்­றிய உரை­யின்­போது தமிழ், முஸ்லிம் மக்கள்  எனக்கு  வாக்­க­ளிக்­க­வில்லை என்­றாலும்   நான்  நாட்டு மக்கள் அனை­வ­ருக்கும் ஜனா­தி­ப­தி­யாக செயற்­ப­டுவேன்.   தமிழ் , முஸ்லிம் மக்கள் என்­னுடன் ஒன்­றி­ணைந்து பணி­யாற்ற முன்­வ­ர­வேண்டும் என்று நான் அழைக்­கின்றேன் என தெரி­வித்­தி­ருந்தேன்.

எம்­முடன்  ஒரே­யொரு தமிழ் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரே இருக்­கின்றார்.  அவர்தான்  டக்ளஸ் தேவா­னந்தா  அவ­ருக்கு தேசிய ரீதி­யி­லான அமைச்சு  நான் கொடுத்­துள்ளேன்.  இது­வரை அவ­ருக்கு பிராந்­திய ரீதி­யி­லான அமைச்­சுக்­களே வழங்­கப்­பட்­டு­வந்­தன.  ஆனால் நான் மீனவ அமைச்சை   வழங்கி  தேசிய ரீதியில்   செயற்­ப­டு­வ­தற்கு நட­வ­டிக்கை  எடுத்­துள்ளேன்.  இதன் மூலம் தமிழ் மக்­க­ளுக்கு  நான்  தக­வலை  அனுப்­பி­யுள்ளேன். வடக்கு, கிழக்கில்  மீன­வர்கள்  பிரச்­சி­னை­களை எதிர்­நோக்கி வரு­கின்­றனர். அதேபோல் இந்­திய மீனவர் பிரச்­சி­னையும் காணப்­ப­டு­கின்­றது. எனவே இவற்­றுக்கு எல்­லாம்­தீர்வு காணும் வகை­யி­லேயே தேசிய அமைச்சை  டக்ளஸ் தேவா­னந்­தா­வுக்கு வழங்­கி­யுள்ளேன்.

அபி­வி­ருத்தி மூலமே  இனங்­க­ளுக்­கி­டையே ஐக்­கி­யத்தை  ஏற்­ப­டுத்­தலாம். சமஷ்டி என்றும் அதி­கா­ரப்­ப­கிர்வு என்றும்  கூறிக்­கொண்டு  மக்களை அர­சியல் தலை­வர்கள்  ஏமாற்­றி­வந்­துள்­ளனர். பெரும்­பான்­மை­யின மக்கள் விரும்­பாத  எத­னையும் செய்ய முடி­யாது. அந்த மக்கள் எதிர்க்கும் விட­யங்­களை மேற்­கொள்ள முடி­யாது. சமஷ்டி என்றும் அதி­கா­ரப்­ப­கிர்வு என்றும் கூறி மக்­களை ஏமாற்­று­கின்­றனர்.

அனை­வரும் ஒற்­று­மை­யாக வாழும் கெள­ர­வ­மான சூழல் வேண்டும் என்று  கோரு­கின்­றனர். தெற்கில்  சிங்­க­ளவர் ஒருவர் முருங்கை இலை விற்­கின்றார். தமிழர் ஒருவர் வியா­பாரம் செய்­கின்றார். இதில் கெள­ரவம் என்று எதனை கொள்­ள­மு­டியும். கெள­ர­வத்­துடன் வாழ்­வது என்றால் கல்வி, சுகா­தாரம், உட்­பட மக்­களின் தேவை­களை  நிறை­வேற்­றக்­கூ­டிய   வாழ்வு தேவை. அத­னையே  கெள­ர­வ­மாக வாழும் சூழல் என்று கூறலாம்.

அதி­கா­ரப்­ப­கிர்வு  குறித்து பேசி பய­னில்லை. அபி­வி­ருத்தி மூலமே இனங்­க­ளுக்­கி­டையே ஒற்­று­மை­யையும் நல்­லி­ணக்­கத்­தையும் ஏற்­ப­டுத்த முடியும்.  சில தினங்­க­ளுக்கு முன்னர்  வடக்கு, கிழக்கை  சேர்ந்த   நான்கு ஆயர்­மார்­களை  பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில்  சந்தித்துப் பேசினேன். அவர்கள்  வடக்கு, கிழக்கில் தொழில் பயிற்சிகளை வழங்குமாறும் முதலீடுகளை  உருவாக்கி  தொழில் பேட்டைகளை உருவாக்குமாறும் வேலைவாய்ப்புக்களை வழங்குமாறும்  தொழில் பயிற்சிகளை வழங்கமாறுமே   கோரினர்.