அணு ஆயுத பேச்சுவார்த்தையில் அமெரிக்காவிற்கு சவால் விடுத்த சீனா

அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடனான முத்தரப்பு ஆயுதக் கட்டுப்பாட்டு பேச்சுவார்த்தையில் சீனா கலந்து கொள்ள வேண்டுமாயின், அமெரிக்கா தனது அணு அயுதங்களை சீனாவின் மட்டத்திற்கு குறைக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று சீன மூத்த தூதரக அதிகாரி இன்று(08) தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு பெப்ரவரியில் முடிவடையவுள்ள அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான முக்கிய அணு ஆயுத ஒப்பந்தத்தை விரிவுபடுத்துவதற்காக முத்தரப்பு பேச்சுவார்த்தைகளில் சேர சீனாவிற்கு அமெரிக்கா பலமுறை அழைப்பு விடுத்துள்ளது.

முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சேர சீனாவிற்கு விருப்பம் இல்லை என சீன வெளியுறவு அமைச்சகத்தின் ஆயுதக் கட்டுப்பாட்டுத் துறையின் தலைவர் பு காங் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.