புதிய அரசின் அமைச்சரவையில் வெளிவிவகார அமைச்சு பதவி தினேஷ் குணவர்தனவுக்கு வழங்கப்படவுள்ளது என “அருண’ என்ற சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன், விளையாட்டுத் துறை அமைச்சராக நாமல் ராஜபக்ஷவும், கல்வி அமைச்சராக ஜீ.எல். பீரிஸும், சுகாதார அமைச் சராக பவித்ராதேவி வன்னியாராச்சியும் பதவியேற்கவுள்ளார். விவசாயத்துறை அமைச்சராக மஹிந்தானந்த அளுத்கமகேயும், சுற்றுலாத்துறை அமைச்சராக பிரசன்ன ரணதுங்கவும், ஊடகத்துறை அமைச்சராக கெஹலிய ரம்புக்வெலவும், நீதி அமைச்சராக அலி சப்ரியும் நியமிக்கப்படவுள்ளனர்.
அதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப்பெற்ற சரத் வீர சேகரவுக்கும், நுவரெலியா மாவட்டத்தில் முதலிடம் பிடித்த ஜீவன் தொண்டமானுக்கும் அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளது எனவும் மேற்படி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சரவை நாளை 12 ஆம் திகதி கண்டியில் பதவியேற்கவுள்ளது.