விண்வெளி நிலையப் பணி: வீரர்களை விண்ணுக்கு அனுப்பியது சீனா

303 Views

சீனா தன் புதிய விண்வெளி நிலையத்தை அமைக்க மூன்று விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பியுள்ளது.

நி ஹாய்ஷெங், லு பூமிங், டாங் ஹாங்போ ஆகிய மூன்று விண்வெளி வீரர்களும் மூன்று மாதம் பூமியிலிருந்து 380கிமீட்டர் தூரத்தில் டியான்ஹே மாட்யூலில் தங்குவர்.

சீனாவின் விண்வெளி வீரர்கள் நீண்டகாலம் விண்வெளியில் தங்கவிருப்பது ஐந்து வருடங்களில் இதுவே முதல்முறை.

ஷென்சூ12 என்ற விண்கலம் நேற்று (ஜூன் 16, வியாழக்கிழமை) உள்ளூர் நேரப்படி 9.22 மணிக்கு, கோபி பாலைவனத்திலுள்ள ஜியூகுவான் செயற்கை கோள் ஏவுதளத்திலிருந்து மார்க் 2 எஃப் ராக்கெட் மூலம் சீனாவால் ஏவப்பட்டுள்ளது.

டாங் ஹாங்போ (இடது), நி ஹாய்ஷெங் (மத்தி), லு பூமிங் (வலது),

சீனா தன் விண்வெளி முயற்சிகளில் கணிசமாக பணத்தை செலவழித்தது, கடந்த 2019ஆம் ஆண்டில் நிலவின் தொலைதூரத்திற்கு இயந்திர ரோவரை அனுப்பிய முதல் நாடு என்கிற பெருமையை பெற்றது.

சர்வதேச விண்வெளி மையத்தில் சீனா ஒரு கூட்டாளி நாடு அல்ல. எனவே விண்வெளி மையத்தை அமைப்பதில் தனித்து செயல்பட வேண்டி இருந்தது.

“நாங்கள் ஒத்துழைப்புகளை வரவேற்கிறோம்” என ஷென்சூ 12 அறிமுகம் தொடர்பாக கடந்த புதன்கிழமை நடந்த பத்திரிகையாளர் சந்திபில், சீனாவின் மனித விண்வெளிப் பயண முகமையின் உதவி இயக்குநர் ஜி க்விமிங் கூறியது இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் “சீனாவின் விண்வெளி நிலைய பணிகள் நிறைவடைந்த பின், சீன மற்றும் வெளிநாட்டு விண்வெளி வீரர்கள் ஒன்றாக செயல்படுவதை நாங்கள் காண்போம்” எனவும் கூறியுள்ளார்.

கடந்த ஆறு மாதங்களில் நிலாவிலிருந்து பாறை மற்றும் மண்ணின் மாதிரியை பூமிக்கு கொண்டுவந்தது, செவ்வாய் கிரகத்தில் 6 சக்கர ரோபோட்டை நிறுத்தியது என கடினமான செயல்களை நிகழ்த்தி காட்டியது சீனா என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி -பிபிசி

Leave a Reply