ரிஷாட் பதியுதீனின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் கைது.

383 Views

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்னெடுத்த விசாரணைகளில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரரான ரியாஜ் பதியுதீனின் குற்றப்புலனாய்பு திணைக்களத்தினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

41 வயதான அவர் புத்தளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விசாரணைகளில் 40 வயதுடைய மற்றுமொருவரும் புத்தளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

காவற்துறை ஊடகப்பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள இருவர் தொடர்பிலும் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசேட விசாரணை குழு ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேவேளை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி மட்டகளப்பு சியோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதலை நடாத்திய நபரை அழைத்து சென்ற மற்றும் வழிநடத்திய பிரதான சந்தேகநபர் கடந்த மாதம் 29 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

அவர் கொச்சிக்கடை தேவாலயத்தில் தாக்குதல் நடாத்திய சந்தேகநபரையும் வழிநடத்தியுள்ளதற்கான தகவல் கிடைத்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை சினமன் கிரேண்ட் விருந்தகத்தில் தாக்குதல் நடத்தியவருக்கு ஆதரவு வழங்கிய ஒருவர் கொத்தட்டுவ பகுதியில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்

Leave a Reply