ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவருக்கு விஷம் கொடுத்தது தொடர்பாக ஆதாரம் இல்லை – ட்ரம்ப்

397 Views

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு விஷம் கொடுத்தது தொடர்பாக தங்களுக்கு இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் கருத்துத் தெரிவிக்கையில், அலெக்ஸி நவால்னிக்கு நேர்ந்தது பயங்கரமானது. இது நிச்சயம் நடந்திருக்கக் கூடாது. ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி விஷம் அருந்தியது தொடர்பாக தங்களுக்கு இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. நாங்கள் தொடர்ந்து அவரின் வழக்கைக் கண்காணித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

ரஷ்ய அதிபர் புட்டினின் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி நவால்னி பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த வேளையில் கடந்த வியாழக்கிழமை டாம்ஸ்க் நகரிலிருந்து மாஸ்கோவிற்கு விமானத்தில் செல்லும் போது நவால்னி மயங்கி விழுந்தார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஜேர்மனி கொண்டு செல்லப்பட்டார்.

இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரான்ஸ், ஜேர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

Leave a Reply