ரஷ்யா அறிமுகப்படுத்தும் நடமாடும் அணுமின் நிலையம்

420 Views

ரஷ்யா தனது மிதக்கும் அணு மின் நிலையத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கத் தீர்மானித்துள்ளனர்.

இதற்கமைவாக ரஷ்யாவின் ஆர்ட்டிக் துருவப் பகுதியிலுள்ள துறைமுகமான ரெமான்ஸ்க்கிலிருந்து கிழக்குத் திசையில் 5000 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள சுக்கோட்கா நோக்கி உலகின் முதலாவது மிதக்கும் அணு மின் நிலையம் பயணிக்கவுள்ளது.

இந்த அணு மின் நிலையத்தின் ஊடாக ரஷ்யாவின் துருவப் பகுதிகளில் ஒதுக்குப்புறமாகவுள்ள பிரதேசங்களுக்கான மின் விநியோகத்தை மேற்கொள்ள முடியும் என்று ரஸ்ண அணு முகவர் நிலையம் அறிவித்துள்ளது.

ரஷ்யாவின் இந்த மிதக்கும் அணு மின் நிலையம் பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்று சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்காக குரல் கொடுத்து வரும் கிறீன்பீஸ் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக நாடுகள் மோசமான காலநிலை மாற்றத்திற்கு முகம் கொடுத்துள்ள சூழ்நிலையில் அந்த நிலைமைகளை மேலும் மோசமாக்கலாம் என்றும் கிறீன் பீஸ் அச்சம் வெளியிட்டுள்ளது.

 

 

Leave a Reply