ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது ஆய்வு முடிவுகள்

135 Views

ரஷ்யா கண்டுபிடித்திருக்கும் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பு மருந்து தொடர்பான ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த முடிவுகளில் குறித்த கொரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பானது என்றும், எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை என்பதும் அறிய வந்துள்ளது என்று ரஷ்யாவின் மருத்துவ வார இதழான தி லான்செட் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மனித பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட அனைவருக்கும் 21 நாட்களில் நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்திருக்கின்றது. கடந்த ஒக்டோபர் மாதத்தில் பெரியளவில் 0,000 பேருக்கு இந்த மருந்து செலுத்தி ஆய்வு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த மருந்து இந்தியாவிலும் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை மூன்றாவது மனித பரிசோதனைக்கு உட்படுத்துவது குறித்து மத்திய அரசுடன் பேசப்பட்டு வருவதாக ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.

இந்த மருந்து தான் ரஷ்ய அதிபரின் மகளிற்கு செலுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply