யாழில் அனல் மின் நிலையம் அமைக்கும் முயற்சி?

591 Views

நேற்றைய தினம் முறிகண்டிப் பகுதியில், யாழ்ப்பாணத்திற்கு கனரக வாகனங்கள் சென்றதை மக்கள் அவதானித்துள்ளனர். பாரி இயந்திரங்களை ஒத்த பொருட்கள் போன்ற பொருட்களை யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் சென்றதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த வாகன அணியை மக்கள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்ததாகவும், இதைப் பற்றி அறிய முற்பட்ட மக்களுக்கு, அந்த வாகனத் தொடரணியில் இருந்தவை அனல் மின் நிலையம் அமைப்பதற்குத் தேவையான பொருடக்ள் எனவும், இவை இந்தியாவிலிருந்து எடுத்து வரப்பட்ட உபகரணங்கள் எனவும் அறிய முடிந்ததாகவும் கூறப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் அனல் மின் நிலையத்தை அமைக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடபடவுள்ளதாக என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.

Leave a Reply