இலங்கை தமிழர்களை குடியுரிமை சட்டவரைவில் சேர்க்குமாறு ரவிசங்கர் மற்றும் வைரமுத்து வலியுறுத்து

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தமிழ் நாட்டில் வாழும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதை இந்திய மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என ஆன்மீக குருவான ரவிசங்கர் கேட்டுள்ளார்.

ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து மையம் பரிசீலிக்க வேண்டும் என்று ரவிசங்கர் கூறும் அதேவேளை

“தங்கள் நிலத்தை இழந்த மனிதர்களாக இலங்கைத் தமிழர்கள் பார்க்கப்பட வேண்டும்” என கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் ” இலங்கை அகதிகளை அண்டை நாட்டின் குடிமக்கள் என நோக்கக்கூடாது’ எனக் குறிப்பிட்டதுடன் ‘இலங்கை தமிழ் அகதிகளை தங்கள் நிலத்தை இழந்த மனிதர்களாக கருதி குடியுரிமை திருத்த மசோதா மனிதநேயத்தைக் காட்டுமா” எனவும் கவிஞர் மத்திய அரசை வினவியுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்ட சட்டவரைபு மக்களவை நிறைவேற்றிய ஒரு நாள் கழித்து ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் வைரமுத்து ஆகியோரிடமிருந்து மத்திய அரசுக்கு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.