முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள் 16 பேர் இன்று காலை விடுதலை

225 Views

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் 16 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பொசன் தினத்தை முன்னிட்டு பொது மன்னிப்பின் அடிப்படையில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதைவிட மேலும் 77 கைதிகளும் இன்று ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டனர்.

Leave a Reply