மீனவர்கள் மீது தாக்குதல் – இலங்கை அரசிற்கு தமிழக ஆளுநர் கண்டனம்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியது கண்டனத்திற்குறியது என  இன்று கூடிய சட்டப்பேரவை கூட்டத்தில் உரையாற்றும் போது தமிழக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத்தேர்தல் இந்தாண்டு நடைபெற உள்ள நிலையில், இன்று சென்னை கலைவானர் அரங்கில் சட்டப்பேரவை கூடியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றி கூட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

அவர் அங்கு உரையாற்றுகையில், தமிழகத்தில் தற்போதுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கை, மீனவர் நலன்,தொழில் முதலீடு ஈர்ப்பு,நதிநீர் பிரச்னை,நீர்பாசண திட்டங்கள்,இருமொழிக் கொள்கை,புனித பயண நிதியுதவி ஆகியன தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார்.

இதில், “தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதுகாரணமாக 4 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தை இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும்படி மத்திய அரசிடம் வலியுறுத்திப்பட்டுள்ளது. இலங்கை நாட்டின் காவலில் இருக்கும் மீதமுள்ள 12 மீனவர்களையும் மீட்டெடுக்க அரசு தொடர்ந்து தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது” என்றார்.