மட்டு – கிரான்குளம் பகுதியில் வீசிய சுழல் காற்றால் வீடுகள் சேதம்

570 Views

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் வீசிய சுழல் காற்று காரணமாக பல வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் பொது கட்டிடங்களுக்கும் சேதமேற்பட்டுள்ளது.

IMG 5265 மட்டு - கிரான்குளம் பகுதியில் வீசிய சுழல் காற்றால் வீடுகள் சேதம்

நேற்று மாலை கிரான்குளத்தின் சில பகுதிகளில் இந்த சுழல் காற்று வீசிய நிலையில், வீடுகள் மேல் மரங்கள் முறிந்துவீழ்ந்துள்ளதுடன் சில வீடுகளின் கூரைகள் காற்றினால் அள்ளிச்செல்லப்பட்டுள்ளனர்.

IMG 5228 மட்டு - கிரான்குளம் பகுதியில் வீசிய சுழல் காற்றால் வீடுகள் சேதம்

கடந்த சில நாட்களாக நிவர் புயல் தொடர்பில் அறிவுறுத்தல்கள் வடகிழக்கு கரையோரப் பகுதிகளுக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், இந்த சுழல் காற்று வீசியுள்ளது.

IMG 5190 மட்டு - கிரான்குளம் பகுதியில் வீசிய சுழல் காற்றால் வீடுகள் சேதம்

இதன்போது கிரான்குளம் பத்திரகாளியம்மன்,மீனவர் மீன் விற்பனை நிலையம்,மீனவர் சங்க கட்டிடம் என்பன சேதமடைந்துள்ளது.

IMG 5235 மட்டு - கிரான்குளம் பகுதியில் வீசிய சுழல் காற்றால் வீடுகள் சேதம்

அதேபோன்று கிரான்குளம் மத்திய பகுதியிலேயே இந்த சூழல் காற்று தாக்கியுள்ளதுடன் இதன்போது பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

IMG 5200 மட்டு - கிரான்குளம் பகுதியில் வீசிய சுழல் காற்றால் வீடுகள் சேதம்

கிரான்குளம் மத்தியில் வீசிய சூழல் காற்று காரணமாக இடம்பெற்றுள்ள சேத விபரங்கள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்படுவதாக குறித்த பகுதியின் கிராம சேவையாளர் தயனி கிருஸ்ணாகரன் தெரிவித்தார்.

IMG 5169 மட்டு - கிரான்குளம் பகுதியில் வீசிய சுழல் காற்றால் வீடுகள் சேதம்

பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply