மட்டக்களப்பு மேச்சல் தரை விவகாரம்- பிரச்சனைகளைத் தீர்க்க நடவடிக்கை

1,258 Views

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயித்தமடு,மாதவனை பகுதிகளில் உள்ள மேய்ச்சல்தரை,  பெரும்பான்மை  இனத்தவர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாய நடவடிக்கைகள் குறித்து ஆராய, குழு ஒன்று அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் ஒழுங்கமைப்பில், அமைச்சர் சாமல் ராஜபக்ச தலைமையில்  மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக் குறித்து நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில், மாதவன மயித்தமடு  பகுதியில்  கால் நடைகளுக்காக ஒதுக்கப்பட்ட மேய்ச்சல் தரையில் பெரும்பாண்மை இனத்து மக்கள் மேற்க்கொள்ளும் சோளன் பயிற் செய்கையை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம் மற்றும் அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோரால் முன்வைக்கப்பட்டது.

02 மட்டக்களப்பு மேச்சல் தரை விவகாரம்- பிரச்சனைகளைத் தீர்க்க நடவடிக்கை

அதே நேரம் கூட்டத்தில் கலந்துகொண்ட அம்பாரை தெய்யத்த கண்டியை சேர்ந் சோளன் பயிர் செய்கைக்கு பொறுப்பாக உள்ள விவசாய சங்கத்தின் தலைவர் லியனகே தாங்கள் நெடுங்காலமாக இவ்விடத்தில் வாழ்து வருவதாகவும்  அதற்கான பிறப்பு சான்றுதல்கள் வாழ்விடப் பதிவு என்பவற்றை  சமர்ப்பித்தார். ஆனால் 2011 ஆண்டு வரையப்பட்ட நில அளவை படத்தின் ஆதாரத்தை மேற்க்கோள் காட்டி லியனகே முன்வைத்த ஆதாரங்கள் பொய் என நிறுவிக்கப்பட்டது.

இதனையடுத்து அங்கு சமூகமளித்திருந்த சட்டத்தரணியும் அபிவிருத்தி குழு செயலாளருமான  மங்களா சங்கர்2015ஆம் ஆண்டு அமைச்சரவையில்  எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய மேய்ச்சல் தரையை வர்த்த மாணி அறிவித்தல் செய்யப்படவில்லை என விளக்கமளித்தார்.

அதனை தொடர்ந்து, மேற்க்கொண்டு புதிதாக இனி மேல் சோளன் பயிர் செய்கைக்கு யாரையும் சேர்த்து கொள்ள வேண்டாம் என ஆளுனருக்கு  உத்தரவிட்டார் அமைச்சர் சமல் ராஜபக்ஸ.

மேலும் இந்த  கூட்டத்தில் வேலி அமைத்து மாடுகளை மேய்க்க கேட்டுக்கொள்ளப்பட்டதிற்கு, கால் நடை உரிமையாளர்களினால் மறுப்புத்தெரிவிக்கப்பட்டது.

 இதனையடுத்து இராஜங்க அமைச்சர் ச. வியாழேந்திரன்,  

1.உடனடியாக சோளன் பயிர்ச் செய்கையை நிறுத்துவது.  

2.இப் பிரச்சனையை ஆராய்வதற்க்கென குழு ஒன்றை அமைப்பது என்று முன் வைத்த ஆலோசனை ஏக மனதாக  ஏற்றுக்கொள்ளப்பட்டு குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.

இந்தக் குழு, எதிர்வரும் நவம்பர் 2ம் திகதி வெளிக்கந்தை மகாவெளி அலுவலகத்தில்  மேச்சல் தரை விவகாரம் குறித்து ஆராயும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கட்சிக்கு அப்பால்  தமிழர்கள் என்ற ரீதியில் அனைவரும் ஒன்று சேர்ந்து குறித்த பண்ணையாளர்களின் விவகாரத்தில் செயற்பட்டமை, மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply