சிறீலங்கா வந்துள்ள அமெரிக்கா படையினர்

554 Views

இரண்டு விமானங்கள் மூலம் அமெரிக்காவின் சிறப்பு படையினரும், புலனாய்வு படை அதிகாரிகளும் நேற்று (24) சிறீலங்காவின் பண்டாரநாயக்க அனைத்துலக விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (27) அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலாளர் மைக் பொம்பியோ சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொள்வதைத் தொடர்ந்து அவரின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காகவே இவர்கள் சிறீலங்காவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் மிகப்பெரும் இராணுவ விநியோக விமானமான சி-7 ஏ குளோப்மாஸ்ரர்-3 எனப்படும் விமானம் மூலம் ஒரு தொகுதி படையினரும், உபகரணங்களும், கட்டாரில் இருந்து பயணிகள் விமானம் மூலம் மேலும் ஒரு தொகுதி படையினரும் வந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply