மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர யாழ். விஜயம்

753 Views

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமாகிய அநுரகுமார திஸநாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இந்த விஜயத்தின் போது மக்கள் வீழ்ச்சியடைந்த தேசத்தைக் நாம் கட்டியெழுப்புவோம் என்னும் தொனிப் பொருளில் யாழ். ரிம்பர் மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் சபைக் கூட்டத்திலும் கலந்து கொண்டிருந்தார்.

Anura jaff2 மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர யாழ். விஜயம்மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருந்த அநுரகுமார திஸநாயக்க விசேட உரையொன்றையும் ஆற்றியிருந்தார்.

இந்நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது அநுரகுமார திஸநாயக்க மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Leave a Reply