தமிழ் மக்களின் தாயகப் பிரதேசமான வடபகுதியின் ஊடாக அண்மைக்காலமாக பெருமளவான போதைப்பொருட்கள் இந்தியாவில் இருந்து கடத்தப்படுகின்றன.
இன்று (31) மன்னார் மாவட்டத்தில் 150 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான 10.4 கிலோ ஐஸ் (methamphetamine crystals) எனப்படும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலைமன்னாரில் இருந்து வங்காலைப் பகுதிக்கு கடத்தப்படும்போதே இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பிக்கப் வாகனத்தில் போதைப்பொருட்களை கடத்திய இரு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.