பொது ஜன பெரமுன கட்சிக்கு ஆதரவாக மட்டக்களப்பு கச்சேரி தகவல் திணைக்களம்?

847 Views

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் தகவல் திணைக்களம் மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொது ஜன பெரமுன கட்சிக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளது.

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் அரசாங்க அதிகாரிகள் ஈடுபடக்கூடாது என்ற விதிமுறைகள் இருக்கும் போது மாவட்ட செயலகத்தின் தகவல் திணைக்கள அதிகாரி ஒருவர் பொது ஜன பெரமுன கட்சியின் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட தகவல் திணைக்கள அதிகாரியான ஜீவானந்தம் அவர்கள் நேற்றைய தினம் மட்டக்களப்பு பொது ஜன பெரமுன கட்சியின் அங்கத்தினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். இவர் கடந்த காலங்களில் கருணா என்கிற விநாயகமூர்த்தி முரளிதரனுடன் இணைந்து செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply