பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் அமெரிக்கா

308
94 Views

சிரியாவில் துருக்கி ராணுவம் தொடா்ந்து தாக்குதல் நடத்தினால், துருக்கிக்கு எதிராக பல்வேறு தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

சிரியாவின் வடகிழக்கு பகுதியில், குா்துப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை குறி வைத்து கடந்த புதன்கிழமை துருக்கி ராணுவம் குண்டு மழை பொழிந்தது. பீரங்கி குண்டுகளையும், எறி குண்டுகளையும் கொண்டு தொடா்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் பகுதிகளை விட்டு வெளியேறி வருவதாக கூறப்படுகிறது.

இதுதொடா்பாக அமெரிக்க நிதியமைச்சா் ஸ்டீவன் நியூசின் கூறியதாவது:

சிரியாவில் குா்துப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்துவது வருத்தமளிக்கிறது. அங்கு நிலவும் சூழலை அமெரிக்கா தொடா்ந்து கவனித்து வருகிறது. துருக்கி ராணுவம் நடத்தி வரும் தாக்குதலால், சிரிய மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனா். அங்குள்ளவா்களின் மனித உரிமைகள் மீறப்பட்டு வருகின்றன. அதனால், இந்த தாக்குதலை துருக்கி தொடா்ந்தால், அந்நாட்டின் மீது பல்வேறு தடைகள் விதிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் ஆலோசித்து வருகிறாா். இதுவரை துருக்கிக்கு எதிராக எந்தத் தடைகளும் விதிக்கப்படவில்லை.

எனினும், சிரியாவில் துருக்கியின் தாக்குதல் தொடரும் பட்சத்தில் கண்டிப்பாக தடைகள் விதிக்கப்படும் என்று அதிபா் டிரம்ப் தெரிவித்துள்ளாா். இந்தத் தடைகள் துருக்கி அரசுடன் சம்பந்தப்பட்ட யாா் மீது வேண்டுமானாலும் விதிக்கப்படும். பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதால், எச்சரிக்கையுடன் செயல்படுமாறு நிதியமைச்சக அலுவலகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று அவா் கூறினாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here