பிரபாகரனின் போராட்ட முறையே பிழை என்று சொல்லும் அளவுக்கு சென்றுள்ள கடசி கூட்டமைப்பு-மனோ

சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற HARD TALK (Hiru TV) நிகழ்ச்சியில் மேற்கண்டவாறு ஜனநாயக மக்கள் முன்னணி மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலின் பின் அரசமைக்க வேண்டுமென்றால் கூட்டமைப்பின் ஆதரவை கோரும் எண்ணம் உண்டா? என கேட்கப்பட்டபோது பதிலளித்த மனோ கணேசன்;

பிரச்சினை இல்லை. கூட்டமைப்பு இப்போது பிரபாகரனின் போராட்டமுறையே பிழை என்று சொல்லும் அளவுக்கு சென்றுள்ள ஒரு கட்சி, இப்போது பாருங்களேன். கூட்டமைப்புடன் மகிந்த ராஜபக்ச பேசுகிறாரே.

இன்று தமிழ் பத்திரிக்கை ஒன்றில் படித்தேன். அவசியமென்றால் எதிர்காலத்தில் அரசுக்கு ஆதரவளிக்க தாம் தயார் என சுமந்திரன் கூறியுள்ளாரே. அவர்களுக்கு முடியுமென்றால் எமக்கு முடியாதா? என்ன?

நாங்கள் இருக்கும் ஒரு அரசாங்கத்துடன் மட்டும்தான் கூட்டமைப்பு இருக்க வேண்டும் என நினைப்பவன் இல்லை, நான்!

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டுமானால், சிங்கள மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும். இல்லாவிட்டால், அது முடியாது.

என மனோ கணேசன் குறிப்பிட்டார்.