பாலத்தீனர்கள் மீது இஸ்ரேல்  காவல்துறை தாக்குதல் -100க்கும் மேற்பட்டோர் படுகாயம்

அல்-அக்ஸா மசூதியில் கூடிய பாலஸ்தீனர்கள் மீது  இஸ்ரேல் காவல்துறையினர்  நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஜெருசலேம் தொடர்பாக பாலஸ்தீனம் மற்றும்  இஸ்ரேல்  இடையே  மோதல்  நிலவி வருகிறது. கடந்த சனிக்கிழமை இரவு பாலஸ்தீனர்கள் ஜெருசலேமில் அமைந்துள்ள அல் அக்ஸா மசூதியில் ரம்ஜானை முன்னிட்டு தொழுகையில் ஈடுபட்டனர்.

சுமார் 90,000 பாலஸ்தீனர்கள் அப்பகுதியில் கூடி இருந்துள்ளனர். அப்போது அங்கு சென்ற  இஸ்ரேல்  காவல்துறையினர்  தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளதோடு, கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்கியுள்ளனர்.  இந்த சம்பவத்தில்  100க்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் இத்தாக்குதலைக் கண்டித்து அப்பகுதியில் பாலஸ்தீனர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.