பதில் நடவடிக்கை உண்டு என்பதை சிறீலங்கா உணரவேண்டும் – அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகம்

510 Views

சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சா முன்னைய அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவின் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒடுக்குமுறைகளை நோக்கி வேகமாக நகர்ந்துவருகின்றார். ஆனால் இதனை உலகநாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன. மீண்டும் அடக்குமுறைகள் பிரேயோகிக்கப்பட்டால் பதில் நடவடிக்கைகள் இடம்பெறும் என்பதை சிறீலங்கா அரசு உணரவேண்டும் என அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

சிறீலங்காவில் இடம்பெற்ற தேர்தலில் கோத்தபாயா தலைமையிலான அரசு பெரும் வெற்றிபெற்றுள்ளதை தொடர்ந்து அது இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிரானவர்கள் மற்றும் மாற்றுக்கருத்துடையவர்கள் மீதான வன்முறைகள் அதிகரிக்கலாம். மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், சட்டவாளர்கள் மற்றும் அரசின் கொள்கைகளுக்னு எதிராக குரல் கொடுப்பவர்கள் மீது கோத்தபாயா அரசு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

சமீபகாலமாக இது அதிகரித்துள்ளதுடன், கொரோனோ வைரசின் நெருக்கடிநிலையையும் இராணுவமயப்படுத்தும் நடவடிக்கையாகவே அது மேற்கொண்டுள்ளது. இதனால் பல சந்தர்ப்பங்களில் உடல்ரீதியான தாக்குதல்கள் மற்றும் கண்மூடித்தனமான கைதுகள் என்பன இடம்பெற்றுள்ளன.

தற்போது இடம்பெற்ற தேர்தலில் பெரும்பான்மை ஆசனங்களை பெற்றுள்ள மகிந்த ராஜபக்சா அரசு சிறுபான்மை மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தலாம், அது மட்டுமல்லாது போரில் இடம்பெற்ற குற்றச்செயல்களுக்கு நீதி கோரும் மக்கள் மீதும் வன்முறைகள் பிரயோகிக்கப்படலாம்.

எனவே பொறுப்புக்கூறல் தொடர்பில் குரல்கொடுத்துவரும் உலகநாடுகள், ஐக்கிய நாடுகள் மற்றும் மக்கள் ஆகியவர்களை குறிவைப்பதை சிறீலங்கா அரசு நிறுத்தவேண்டும்.

சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சா முன்னைய அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவின் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒடுக்குமுறைகளை நோக்கி வேகமாக நகர்ந்துவருகின்றார். ஆனால் இதனை உலகநாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன. மீண்டும் அடக்குமுறைகள் பிரேயோகிக்கப்பட்டால் பதில் நடவடிக்கைகள் இடம்பெறும் என்பதை சிறீலங்கா அரசு உணரவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply