தியாக தீபம் திலீபனின் 32 வது நினைவு தின நிகழ்வுகள் நேற்று மாலை மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக நடைபெற்றுது. மட்டக்களப்பு மண்டூர் கணேச புரம் கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் இந்த நிகழ்வு உணர்வு பூர்வமாக நடைபெற்றது.
ஜனநாயக போராளிகள் கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்து நடாத்திய மேற்படி நிகழ்வில் தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன் மற்றும் சீ.யோகேஸ்வரன் ஆகியோரினால் மலர் மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்டவர்களினால் ஈகச் சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
அதனைத்தொடர்ந்து நினைவு தின உரைகளும் நடைபெற்றன.