தலைகீழாக தமிழ்க் கட்சிகள் நின்றாலும் நினைவுகூர அனுமதிக்கக்கூடாது; சுமணரத்ன தேரர்

444 Views

“தமிழ் அடிப்படைவாதக் கட்சிகள் தலைகீழாக நின்றாலும் பயங்கரவாதிகளை நினைவேந்த உரிமை வழங்கப்படக்கூடாது” என அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும், நினைவேந்தல் உரிமைகளை வலியுறுத்தியும் மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தால் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் அடிப்படைவாதக் கட்சிகளின் தாளத்துக்கு அரசு ஆடக்கூடாது. பயங்கரவாதிகளை நினைவுகூர அனுமதி வழங்கித் தவறான முன்னுதாரணமாக அரசு இருக்கவேண்டாம். ஏனெனில் தமிழ்க் கட்சிகளின் அடிப்படைக் கொள்கையே இதுதான்” என்றார் தேரர்.

Leave a Reply