தமிழ்நாடு: அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் ஈழ மக்கள்

கும்மிடிப்பூண்டி இலங்கைத் தமிழர் அகதிகள் முகாமில், 908 குடும்பங்களைச் சேர்ந்த, 2,737 பேர் வசித்து வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் சார்பில், அவர்களுக்காக, 1.15 கோடி ரூபாய் செலவில், 2015ஆம் ஆண்டு, 96 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டன. அந்த குடியிருப்புகளில், 50 வீடுகளில் மட்டுமே அகதிகள் வசித்து வருகின்றனர்.

எஞ்சிய வீடுகள் அனைத்தும், பயன்பாடின்றி பழுதாகிய நிலையில் உள்ளது. இது குறித்து அகதிகள் கூறுகையில், ‘சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாததால், புதிய குடியிருப்புகளை பயன்படுத்தவில்லை. ‘மேலும், பயன்படுத்தபடாமல் உள்ள குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு இல்லை’ என தெரிவித்தனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து, மின் இணைப்புகளை வழங்கி, பழுதான குடியிருப்புகளை சீரமைத்து, போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என அகதிகள் எதிர்பார்க்கின்றனர்.