குடிசன தொகைமதிப்பு 2024” அறிக்கை கடந்த (07/04/2025) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.
2012ல், இலங்கையின் சனத்தொகை 2 கோடியே 40 இலட்சமாக குறிப்பிடப்பட்டது, தற் போது 12, வருடங்கள் கடந்து 2024ல் எடுக்கப்பட்ட சனத்தொகை புள்ளிவிரம் ஒப்பிடுகையில் சனத்தொகை 14,03731 அதிகரித்து காணப்படுகிறது. 2024 இலங்கையின் மொத்த சனத் தொகை 21,763,170 ஆகும். அதாவது, இரண்டு கோடியே 17 இலட்சத்து 63 ஆயிரத்து 170 ஆகும்.
15 வது தேசிய சனத் தொகை கணக்கெடுப்பு 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி 2024 முதல் பெப்ரவரி மாதம் 2025 இரண்டாவது வாரம் நிறைவு செய்யப்பட்டது. அதில் இன ரீதியாக,மத ரீதியான விபரம் வெளிவரவில்லை. மொத்த சனத்தொகை புள்ளி விபரத்தை நோக்குகையில் வடக்கு கிழக்கு தாயக தமிழ் மக்களின் தொகையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
முழுமையாக இன ரீதியாக புள்ளிவிபரம் வெளியிடும்போது இது அறியலாம். 2024ல் மொத்த சனத்தொகையில்..
கிழக்கு மாகாணம்:
1. மட்டக்களப்பு-595453, பேர்.
2. அம்பாறை-744150, பேர்
3. திருகோணமலை-442465, பேர்
வடமாகாணம்:
1. யாழ்ப்பாணம்-594333, பேர்
2. கிளிநொச்சி- 136434, பேர்
3. முல்லைத்தீவு-122542, பேர்
4. வவுனியா- 172257,பேர்
5. மன்னார்- 123674, பேர்
வடக்கு கிழக்கில் சனத்தொகை கூடியமாவட்டமாக அம்பாறையும் குறைந்த சனத் தொகையுள்ள மாவட்டமாக முல்லைத்தீவை யும் பார்க்க முடிகிறது.வடக்கு மாகாணம் இலங்கையில் குறைந் தளவான சனத்தொகையை கொண்ட மாகாணமாக உள்ளது.(இலங்கையிலும் குறைந்த சனத்தொகை கொண்ட மாவட்டமாக முல்லைத்தீவு தொடர்ந்தும் உள்ளது) 2012, சனத்தொகை கணிப்பீட்டுடன் வட கிக்கில் உள்ள எட்டு மாவட்டங்களையும் 2024, கணிப்பீட்டுடன் ஒப்பீடு செய்தால் எனது ஆய்வில் யாழ்மாவட்டத்திலும், வவுனியாமாவட்டத்திலும் சந்தேகம் எழுந்தது.
வடமாகாணத்தில்..
2012ல் யாழ்பாணம் 583882 தொகை 2024ல் 594333 பேர் கூடியுள்ளனர் மேலதிகமாக 10451, பேர் மட்டுமே கூடியுள்ளனர்.
2012ல் கிளிநொச்சி 113510, தொகை 2024ல் 136434, பேர் கூடியுள்ளனர் மேலதிகமாக 22924, பேர் கூடியுள்ளனர்.
2012ல் மன்னார் 99570 தொகை 2024ல் 123674, பேர் கூடியுள்ளனர் மேலதிகமாக 24104 பேர் கூடியுள்ளனர்.
2012ல் முல்லைத்தீவு 92238, தொகை 2024ல் 122542 பேர் கூடியுள்ளனர் மேலதிகமாக 30304 பேர் கூடியுள்ளனர்.
2012ல் வவுனியா 172115, தொகை 2024ல் 172257, பேர் கூடியுள்ளனர், மேலதிகமாக 142, பேர் மட்டுமே கூடியுள்ளனர்.
மொத்தமாக வடமாகாணத்தில் 2012ல் 1061315, சனத்தொகையானது 2024ல் 1149239, ஆக அதிகரித்தாலும் மேலதிகமாக 87925, மக்கள் தொகை மட்டுமே கூடியுள்ளது.
கிழக்கு மாகாணத்தில்..
2012ல் மட்டக்களப்பு 526567, தொகை 2024ல் 595453 மேலதிகமாக 68886, பேர் கூடியுள்ளனர்.
2012ல் அம்பாறை 649402, தொகை 2024ல் 744150 மேலதிகமாக 94748 பேர் கூடியுள்ளனர்.
2012ல் திருகோணமலை 379541 தொகை 2024,ல் 442465 மேலதிகமாக 62924, பேர் கூடியுள்ள னர்.
மொத்தமாக கிழக்கு மாகாணத்தில் 2012ல் 1555510, சனத்தொகையானது 2024ல் 1782065, ஆக அதிகரித்துள்ளது மேலதிகமாக 226544, மக்கள் தொகை மட்டுமே கூடியுள்ளது.(இதில் தமிழர்களை விட இஷ்லாமிய மக்களே அதிகளவில் உள்ளதாக கருதலாம்)
ஆச்சரியம் என்ன வெனில்.. 2012, சனத்தொகை கணிப்பீட்டுக்கு பின் னர் 2024, தற்போது 12, வருடங்களில் பின்னர் யாழ் மாவட்டத்திலும், வவுனியாமாவட்டத்திலும் ஏன் இவ்வாறு சடுதியாக மக்கள் தொகை குறைந்தனர் என்பதை ஆராயப்பட வேண்டும் அதிலும் வவுனியா மாவட்டத்தில் 142, பேர் மட்டுமே 12, வருடங்களில் கூடியுள்ளனர் கணிப்பீட்டில் தவறா அல்லது அந்த இரண்டு மாவட்டங்களில் அதிகளவான மக்கள் நாட்டை விட்டுச்சென்றனரா ? வேறு மாவட்டங்களில் குடியமர்த்தப்பட்டனரா? அல்லது பிறப்பு வீதம் குறைந்ததா? இதனை மீளவும் சமூக ஆர்வலர்கள் கணக்கில் கொள்வது அவசியம் என்பதை நான் வலியுறுத்துகிறேன்.
இனம் இல்லாத நிலத்தால் எந்த முன் னேற்றமும் இல்லை நிலத்தை பாதுகாக்க இனம் முக்கியமானது.
யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் ஆரம்பத்தில் 1977ல் 10, பாராளுமன்ற உறுப்பினர் களாக இருந்தது.
பின்னர் 8, 7, 6, என பிரதி நிதித்துவம் குறைந்து வந்துள்ளது. இறுதியாக 2024, பொதுத் தேர்தலில் 6, பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே யாழ்மாவட்ட தேர்தல் மாவட்டத்தில் கிளிநொச்சி யையும் உள்ளடங்கலாக தற்போது உள்ளனர்.
இது எதிர்வரும் 2030, ம் ஆண்டு பொதுத் தேர்தலில் 5, பாராளுமன்ற உறுப்பினர்க ளாக மாறும் அபாயம் உள்ளது.இதேபோல் கிழக்கு மாகாணத்தில் மொத்த சனத்தொகையில் இன ரீதியிலான கணக்கெடுப்பு புள்ளிவிபரப்பட்டியல் வந்த பின்னர் முதல் இடத்தை முஷ்லிம் மக்கள், இரண்டாம் இடம் தமிழர்கள் என்ற கணிப்பு நிச்சயம் வரும்.
அதில் அம்பாறை மாவட்டத்தில் முஷ்லிம் மக்களின் சனத்தொகை பாரிய அதிகரிப்பை காட்டும்.
அதேபோல் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2012, கணிப்பீட்டில் தமிழர்கள் 72.61,வீதமாகவும், முஷ்லிம் மக்கள் 25.49, வீதமாகவும், சிங்கள வர்,1.17,வீதமாகவும் சனத்தொகை இருந்தது.
தற்போதைய 2024, புள்ளிவிபரம் முழுமை யாக வெளியிடப்பட்ட பின்னர் அவதானித்தால் நான் நினைக்கிறேன் மட்டக்களப்பில் தமிழர் 68, தொடக்கம் 70, வீதத்திற்கு குறையக்கூடிய நிலை வரலாமோ தெரியாது. அடுத்த 12, வருடத்திற்கு பின்னர் அதாவது 2036, ம் ஆண்டு கணக்கெடுக்கும்போது கிழக்கில் தமிழர்களின் விகிதாசாரம் மூன்றாவது நிலையில் வரக்கூடிய அபாயம் உள்ளது தொடர்ந்து தமிழர்களின் பிறப்பு வீதம் குறையுமானால் இது நடக்கும், நிலங்களைக்கூட தக்கவைக்கமுடியாமல் இழக்கும் நிலை ஏற்படலாம்.
வடமாகாணத்தில் சனத்தொகை புள்ளி விபரம் இப்படி தமிழர்கள் குறைவாக இருக்கும் நிலையில் வடமாகாண கல்வி அமைச்சு வெளி யிட்ட இன்னும் ஒரு தகவல் பேரதிர்ச்சியை தந்துள் ளது.
50, மாணவர்களுக்கு குறைவான 56, பாடசாலைகளை மூடவுள்ளதாகவும் வடமாகாணத் தில் 13, கல்வி வலையத்தில் 981, பாடசாலைகளில் 2இலட்சத்து 29, ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்பதாகவும் 451, பாடசாலைகளில் 100, க்கு குறைவான மாணவர்கள் கல்வி கற்பதாகவும்.அதில் 265, பாடசாலைகளில் 50, க்கு குறைவான மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.
அந்த 265, பாடசாலைகளில்
யாழ்மாவட்டத்தில்.95,
கிளிநொச்சி-20
மன்னார்-41
வவுனியா-72
முல்லைத்தீவு-37
பாடசாலைகள் என குறிப்பிடப்பட்டுள்ளது இந்த சகல பாடசாலைளும் தமிழ்பாடசாலைகளாம்.
இதேநிலைதான் கிழக்கில் தமிழ் பிரதேசங்களிலும் உள்ளது.
தமிழ் மக்களின் ம்பெயர்வு, மத்திய கிழக்கு நாடுகளில் வேலைக்காக சென்றது மட்டும் காரணங்களை காட்டி இதனை சமாளிக்க முடியாது. உண்மையில் தமிழ்மக்கள் ஏனைய இனங்களுடன் ஒப்பிடும்போது பிறப்பு இரு பிள்ளைகளுடன் பொருளாதாரம், வேலைப் பழுவை காரணம் காட்டி நிறுத்துவதும் இதற்கான அடிப்படைக் காரணம் என்பதும் உண்மை. எதிர்காலத்தில் இதற்கான திட்டம் என்ன என்பதை இப்போதே சிந்திக்க தவறினால் தமிழர்தாயகம் தமிழர் இல்லாத மாயமாக மாறும்.