அமெரிக்காவில் தொழில் நுட்ப கல்வியை கற்கும் வெளிநாட்டு மாணவர்கள் கல்வி நிறைவடைந்த பின்னர் வழங்கப் படும் வேலை செய்யும் அனுமதியை நிறுத்துவது தொடர்பான அமெரிக் காவின் புதிய சட்டமூலம் இந்திய மாணவர்களை அதிகம் பாதித் துள்ளதாக த எக்கொனமிக்ஸ் ரைம்ஸ் என்ற நாளேடு இந்த வாரம் தெரிவித்துள்ளது.
விஞ்ஞானம், பொறியியல், கணிதம், கணணி மற்றும் தொழில் நுட்பம் போன்ற துறைகளில் கல்வி கற்றும் மாணவர்களுக்கு கல்வி நிறைவடைநதபின்னர் 3 வருடங்கள் வேலை செய்யும் அனுமதியை அமெரிக்கா வழங்கி வந்தது. ஆனால் தற்போது அதனை நிறுத்துவது தொடர்பான சட்டத்தை அமெரிக்கா கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் அமெரிக்காவில் கல்விகற்கும் பெருமளவான வெளிநாட்டு மாணவர்களை பாதித்தாலும், இந்திய மாண வர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
300,000 இந்திய மாணவர்கள் இந்த சட்டத் தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மார்ச் மாதம் கொண்டுவரப்பட்ட இந்த சட்டம் எப்-1 மற்றும் எம்-1 என்ற நுளைவு அனுமதியில் தங்கியிருந்த மாணவர்களை அதிகம் பாதித்ததால் அவர்கள் தற்போது அவசரமாக எச்-1 பி நுளைவு அனுமதி முறைக்கு மாறவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த நுளைவு அனுமதியை அமெரிக்க மற்றும் இந்திய நிறுவனங்களே வழங்க முடியும். அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கு வெளிநாட்டு மாணவர்களால் அதிக நன்மை ஏற்பட்டு வருகின்றது. 2023-2024 கல்வியாண்டில் வெளிநாட்டு மாணவர்களால் 44 பில்லியன் டொலர்கள் வருமானத்தை அமெரிக்கா பெற்றி ருந்தது.