தமிழர்களின் இருப்பு இன்று கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது – கிளிநொச்சியில் சுரேஷ்

227 Views

இந்த நாட்டில் தமிழர்களின் இருப்பு இன்று கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன், வடக்கு கிழக்கு தாயகப் பகுதிகளில் தமிழரின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

“இந்த நாட்டிலிருந்து தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக விரட்டப்படக் கூடிய ஒரு அபாய சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது. எனவே அரசின் அடக்கு முறைகளைக் கண்டித்து முன்னெடுக்கப்படும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணியில் அனை வரும் இணைந்துகொள்ள வேண்டும்” என்றார்.

Leave a Reply