டெல்டா வைரஸ் திரிபு வேகமாக பரவும் தன்மை கொண்டது– WHO எச்சரிக்கை

136 Views

தற்போதைய போக்கே தொடர்ந்தால், கொரோனா வைரஸ் திரிபுகளிலேயே மிகவும் வேகமாக பரவக்கூடிய தன்மை உடைய டெல்டா திரிபு மிகவும் ‘ஆதிக்கம் செலுத்தும் பரம்பரை’ உடைய திரிபாக மாற வாய்ப்புள்ளது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இதுவரை டெல்டா திரிபு  திரிபு 85 உலக நாடுகளில் பரவியுள்ளது.

ஆல்ஃபா திரிபு 170 நாடுகள், பிராந்தியங்கள் அல்லது பகுதிகளில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பீட்டா திரிபு 119 நாடுகளிலும், காமா திரிபு 71 நாடுகளிலும் பரவியுள்ளது தெரியவந்துள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply