சிறீலங்கா கடற்கரையில் இறந்து கரையொதுங்கும் கடல் உயிரினங்கள்

சிறீலங்காவின் தெற்கு மற்றும் கிழக்கு கடற்பகுதியில் அரிய வகை கடல் உயிரினங்கள் இறந்து கரையொதுங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென்னிலங்கையின் கொழும்பு காலிமுகத்திடல், வெள்ளவத்தை, தெகிவளை மற்றும் மவுன்லவேனியா கடற்கரை பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட அரியவகை கடல் ஆமைகள் இறந்து கரையொதுங்கியுள்ளன.

அதே சமயம் கிழக்கு மாகாணத்தின் அறுகம்குடா கடற் பகுதியில் 1.3 மீற்றர் நீளமான சிறிய வகை திமிங்கலங்கள் நான்கு இறந்து கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அனர்த்தத்துக்குரிய காரணங்கள் தெரியாத போதும் அண்மையில் கிழக்கு கடற்பகுதியில் எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.