சட்டவிரோத குடியேறிகளை தடுக்கும் நடவடிக்கையில் மலேசியா

293 Views

மலேசியாவின் மூன்று கிழக்கு கடலோர மாநிலங்கள் வழியாக சட்டவிரோத குடியேறிகள் நுழைவதை தடுக்கும் விதமாக அப்பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளை கடலோர காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

கடல் பகுதிகளில் கண்காணிப்புகள் தீவிரமடைந்துள்ள நிலையில், குடியேறிகளை கடத்தி வர Rat Routes எனப்படும் மறைவானப் பாதைகளை ஆட்கடத்தல் கும்பல்கள் பயன்படுத்துவதாகக் கூறப்படுகின்றது.

இவ்வாறான பாதைகளை கண்காணிக்கும் நடவடிக்கையிலும் மலேசிய பாதுகாப்பு தரப்பு ஈடுபட்டிருக்கிறது. தாய்லாந்து, வங்கதேசம், கம்போடியாவை ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் நுழைவது வாடிக்கையான நிகழ்வாக உள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மலேசியா மேற்கொண்டு வருகிறது.

Leave a Reply