கொரோனா அச்சம்- நாடு திரும்பும் பிலிப்பைன்ஸ் தொழிலாளர்கள்!

173 Views
வெளிநாடுகளிலிருந்து மேலும் 9 ஆயிரம் பிலிப்பைன்ஸ் தொழிலாளர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதும் ஆக்கிரமித்துள்ளது. இதன் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவுகளால் மக்கள் தொழில் வாய்ப்பை இழந்து வருகின்றனர். அதே நேரம்    வெளிநாடுகளில் தொழில் செய்து வந்த பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் வேலை இழப்பு காரணமாக தமது சொந்த நாடுகளுக்குத் திரும்பிச் சென்றுகொண்டுள்ளனர்.
இந்நிலையில், வெளிநாடுகளிலிருந்து பிலிப்பைன்சை சேர்ந்த மேலும் 9 ஆயிரம் புலம்பெயர் தொழிலாளர்கள் நாடு திரும்பியுள்ளதாக பிலிப்பைன்ஸ் வெளியுவுத்துறை தெரிவித்துள்ளது.
இதன் மூலம் கொரோனா சூழல் காரணமாக நாடு திரும்பிய பிலிப்பைன்ஸ் தொழிலாளர்களின் எண்ணிக்கை 213,000 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply