கொங்கொங் சிறப்பு நிர்வாகத்திற்கான சட்ட விதிகள் வெளியீடு

சீன மக்கள் குடியரசு, கொங்கொங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்திற்கான தேசிய பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான 43ஆவது சட்டப்பிரிவு விதிகளை இன்று(07)  முதல் நடைமுறைப்படுத்துகின்றது என சீன ஊடகக் குழுமம் செய்தி வெளியிட்டுள்ளது.

கொங்கொங் சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசு நேற்று(06) வெளியிட்ட செய்தியறிக்கையில், தேசிய பாதுகாப்பைப் பாதிக்கும் குற்றங்களைத் தடுத்து தண்டனை விதிக்கும் வகையில் இந்த விரிவான விதிகள் வகுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விதிகளின்படி, விசாரணைக்குள்ளான நபர் கொங்கொங்கிலிருந்து விலகுவதற்குத் தடை விதித்தல், தேசியப் பாதுகாப்பைப் பாதிக்கும் குற்றங்களுடன் தொடர்புடையவர்களின் சொத்துக்களை முடக்குதல் மற்றும் பறிமுதல் செய்தல் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

அதேவேளை, கொங்கொங்கிற்கான அமெரிக்கத் துணை நிலைத் தூதர் ஹன்ஸ்காம்ஸ்மித் கொங்கொங்கிற்கான தேசியப் பாதுகாப்புச் சட்டம் பற்றி வெளிப்படையாகத் திரித்துப் பேசியதை கொங்கொங் சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசின் செய்தித் தொடர்பாளர் நேற்று வன்மையாகக் கண்டித்தார். இது குறித்து கொங்கொங் அரசின் அரசியல் பிரிவின் தலைவரும் பொதுப் பாதுகாப்புத் துறையின் தலைவரும் அதே நாள் ஹன்ஸ்காம்ஸ்மித்தை வரவழைத்து கொங்கொங் தரப்பின் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

Leave a Reply