காபூலில் அமெரிக்க தூதரகம் அருகே குண்டுவெடிப்பு ; 2 நேட்டோ படையினர் உட்பட 10 பேர் பலி , 42 பேர் காயம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் படையினர் உட்பட 10 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 42 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

காபூலின் கிழக்குப் பகுதியில் அமெரிக்க தூதரத்துக்கு அருகே காரில் வைக்கப்பட்ட குண்டொன்றே இவ்வாறு வெடித்துள்ளது. சம்வத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப் படையும் அங்கு முகாமிட்டுள்ளது.இதில் சில நாட்களுக்கு தலிபான்களின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண தலிபான்களுடன் ஆப்கானிஸ்தான் அரசும், அமெரிக்க அரசும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்ற நிலையிலேயே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதலை தலிபானியர்கள் மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்களும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply