காத்தார் சின்னகுளம் சிறுவர் கழகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வுகள்

காத்தார் சின்னகுளம் சிறுவர் கழகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வுகள் நேற்று காலை இடம்பெற்றது.

கழகத்தின் தலைவர் புஸ்பராசா தனுசியாவின் தலைமயில் கிராமிய சிறுவர் அபிவிருத்தி குழுவின் தலைவர் கி.டினேசின் ஒழுங்கமைப்பில்இடம்பெற்ற குறித்த நிகழவில் முதன்மை அதிதியாக வவுனியா உதவி பிரதேச்செயலாளர் எஸ்,பிரியதர்சினி கலந்துகொண்டார்.

முன்னதாக அதிதிகள் மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டதுடன் மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது. நிகழ்வில் விசேடமாக சிறுவர்களின் நடனநிகழ்வுகளுடன், விழிப்புணர்வு நாடகங்கள் என்பன சிறுவர்களால் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இதன்போது கண்ணகி அறக்கட்டளையின் நிறுவனர் அகிலனின் நிதி பங்களிப்பில் வறுமைநிலையில் உள்ள 80பாடசாலை மாணவர்களிற்கு புத்தகபைகள் வழங்கிவைக்கப்பட்டதுடன்,பரீட்சைகளில் சித்தி எய்திய மாணவர்களிற்கு சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது.
IMG 2051 காத்தார் சின்னகுளம் சிறுவர் கழகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வுகள்

நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக சிறுவர் நன்னடத்தை மேம்பாட்டு உத்தியோகத்தர் ரி.கோகிலரமணி, கண்ணகி அறக்கட்டளை நிறுவனர் தே.அகிலன்கிராமசேவையாளர் க,தர்சன்,சாந்தகுமார்
மற்றும், பலர் கலந்து கொண்டனர்.
IMG 2091 காத்தார் சின்னகுளம் சிறுவர் கழகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வுகள்

IMG 2130 காத்தார் சின்னகுளம் சிறுவர் கழகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வுகள்