கனடாவின் சஸ்கற்சிவான் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல்களில் 10 பேர் கொல்லப்பட்டதுடன், 15 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கத்திக்குத்துக்கு இலக்கானவர்கள் 13 இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலை மேற்கொண்ட டாமியன் சன்டேர்சன் (31) மற்றும் மைலி சன்டேர்சன் (30) ஆகியோர் இன்னும் கைது செய்யப்படவில்லை, அவர்கள் தப்பிவிட்டனர். அவர்கள் கறுப்பு நிற நிசான் காரில் சுற்றித்திரிவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களை தேடி கண்டுபிடிக்கும் வரை குடிமக்களை பாதுகாப்பாக இருக்குமாறு கனேடிய காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
முதலாவது கத்திக்குத்து தொடர்பான தகவல் நேற்று (4) அதிகாலை கிடைத்திருந்தது. இந்த தாக்குதல் மிகவும் பயங்கரமானதும் துன்பமானதும் என தெரிவித்துள்ளார் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ.