தாய்லாந்தில் தங்கியிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ வெள்ளிக்கிழமை இரவு இலங்கை திரும்பி இருக்கின்றார். இந்த நிலைமையில் அவரை மீண்டும் அரசியலில் ஈடுபடுத்துவதற்காக பொதுஜன பெரமுனவின் ஒரு குழுவினர் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும் கூட மற்றொரு பிரிவினர் அதற்கு எதிரான நிலைப்பாட்டியை எடுத்திருப்பதாக தெரிகின்றது.
கோட்டாபய ராஜபக்ஷ கடந்த 24ஆம் தேதி நாடு திரும்புவதற்கு முதலில் திட்டமிட்டிருந்தாா். இறுதி வேளையில் அவரது வருகை பிற்படப்பட்டது. கோட்டா பாய நாடு திரும்புவதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரும்பவில்லை என கூறப்படுகின்றது. ரணிலுடன் அவர் நடத்திய தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து அவரது வருகை ஒத்தி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை திரும்ப வேண்டும் என கோட்டா விரும்புவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. முதலாவதாக அமெரிக்காவிற்கான அவரது விசா ரத்து செய்யப்பட்டு இருக்கின்ற அதே வேளையில் கிரீன் காட்டை பெறுவதற்கு அவரது விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலைமையில் உடனடியாக அமெரிக்கா செல்வது அவருக்கு சாத்தியமற்றது. மத்திய கிழக்கு உட்பட பல்வேறு நாடுகளில் அரசியல் அடைக்கலம் பெறுவதற்கான முயற்சிகளை அவர் மேற்கொண்ட போதிலும் கூட அந்த நாடுகள் அனைத்துமே அதனை நிராகரித்து விட்டன.
இந்த நிலைமையில் நாடு திரும்புவது என்று என்பதை விட அவருக்கு வேறு தெரிவுகள் எதுவும் இருக்கவில்லை. இலங்கை திரும்புவது என அவர் முடிவெடுத்ததற்கு இதுதான் முதலாவது காரணம் என சொல்லப்படுகின்றது.
இரண்டாவதாக அவரது பிரயாணம் மற்றும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்கி இருப்பதற்கான கட்டணங்கள் என ஏற்கனவே பல கோடிகளை தாண்டி இருக்கின்றது. முன்னாள் ஜனாதிபதி என்ற முறையில் அவருக்கான கொடுப்ானவை அரசாங்கமே வழங்கியதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணப்படுத்தனா முதலில் தெரிவித்திருந்த போதிலும் கூட அது தவறான தகவல் என தகவல் திணைக்களம் பின்னர் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. முன்னாள் ஜனாதிபதியின் மகன்தான் இந்த செலவுகளை கொடுத்து வருகிறார் என்ற ஒரு தகவலும் வெளியாகி இருக்கின்றது. இந்த அளவு பெருந்தொகையான பணம் அவருக்கு எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பிலும் ஊடகங்கள் பல கேள்விகளை எழுப்பி இருக்கின்றன.
தாய்லாந்தில் 90 நாட்கள் தங்கி இருப்பதற்கான விசா அனுமதி கோட்டாவுக்கு கிடைத்திருக்கின்ற போதிலும் கூட அவ்வளவு நாட்கள் தாங்கி இருப்பதற்கு ஏற்படக்கூடிய செலவினத்தை கருத்தில் கொண்டும் நாடு திரும்புவது என்ற முடிவை அவா் எடுத்ததாக சொல்லப்படுகின்றது. கோட்டாபயவுக்கு உதவியாக இருவரும் அவரது மனைவியின் மனைவிக்கு உதவியாக இருவரும் என ஆறு பேருடைய செலவுகள் முன்னாள் ஜனாதிபதியின் மகனுடைய பொறுப்பில் இப்போது இருப்பதால் அதனை தொடர்ந்து பொறுப்பேற்க முடியாத நிலைமையில் அவர் இருப்பதாக சொல்லப்படுகின்றது. இந்த செலவீனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது நாடு திரும்புவது என கோட்டாபய ராஜபக்ஷ முடிவெடுப்பதற்கு இரண்டாவது காரணமாக சொல்லப்படுகின்றது.
தாய்லாந்தில் 90 நாட்கள் தான் இருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும் கூட ஹோட்டல் அறையை விட்டு அவர் வெளியேறக் கூடாது என்ற உத்தரவு அவரை பெரிதும் சங்கடத்தில் உள்ளாகி இருப்பதாக கூறப்படுகிறது. உளரீதியாக இதனால் அவர் பெரும் அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கின்றார். நாடு திரும்புவதற்கு இது மூன்றாவது காரணம் என சொல்லப்படுகின்றது.
இதனை விட நாட்டில் உருவாகியிருந்த கிளர்ச்சிகள் பெருமளவுக்கு அடக்கப்பட்டு விட்டன. இதில் முன்னணியில் இருந்து செயல்பட்ட பலர் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டு இருக்கின்றார்கள். அல்லது கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கின்றார்கள். இதனால் ஜூலை 9ஆம் தேதி நடைபெற்றது போன்ற ஒரு மக்கள் கிளா்ச்சி மீண்டும் நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை என அரசியல் வட்டாரங்கள் கருவுகின்றன. இதனால் தான் நாடு திரும்புவதில் பிரச்சனை இருக்காது என முன்னாள் ஜனாதிபதி கருதுவதாக தெரிகின்றது.
இந்தப் பின்னணியில் நாடு திரும்புவதற்கு அவர் எடுத்த முடிவுக்கு பொது ஜன பெரமுனவில் ஒரு பகுதியினர் ஆதரவை தெரிவித்து இருக்கின்றார்கள். அவருக்கு தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரன்னில் விக்கிரமம் சிங்காவை சந்தித்து அவர்கள் கோரிக்கை முன் வைத்திருக்கின்றார்கள். இதனை விட மனித உரிமைகள் ஆணைக்குழு முன்பாகவும் இந்த விவகாரத்தை அவர்கள் கொண்டு சென்றிருக்கின்றார்கள். இதனால் மனித உரிமைகள் ஆணைக்குழு கூட கோட்டாபய நாடு திரும்பினால் அவருக்கு தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கின்றது.
இந்தப் பின்னணியில் செப்டம்பர் முதல் வாரத்தில் – பெரும்பாலும் செப்ரெம்பா் 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அவா் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோட்டாபய அரசியலில் மீண்டும் இறங்குவாரா என்ற கேள்வி பல்வேறு மட்டங்களில் எழுப்பப்படுகின்றது. அவரை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வர வேண்டும் என்ற இலக்குடன் ஒரு சிலர் செயல்பட்டு வருகின்றார்கள். கோட்டாவை ஜனாதிபதி ஆக்குவதற்காக பின்னணியிலிருந்து செயல்பட்ட வியட்மக போன்ற அமைப்புகள் மீண்டும் இதற்காக களத்தில் இறக்கப்படுகின்றன.
இருந்தபோதிலும் ராஜபக்ஷா குடும்பத்தினர் மத்தியில் கூட கோட்டாபய நாடு திரும்புவதற்கு முழுமையான ஆதரவு இருப்பதாக தெரியவில்லை. சண்டே ரைம்ஸ் பத்திரிகைக்கு அவரது அண்ணனான மஹிந்த ராஜபக்ச கடந்த வாரம் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கோட்டாபாய தன்னுடைய பொறுப்புகளை நிறைவேற்றாமல் சென்றுள்ளார் என்பதை ஒரு குற்றச்சாட்டாக அவா் முன்வைத்திருந்தார். ”கோட்டா ஒரு அரசியல்வாதியாக செயல்படவில்லை. தங்களுடைய ஆலோசனைகள் இதனையும் அவர் பொருட்படுத்தவில்லை” என்ற ஒரு கருத்தையும் மஹிந்த ராஜபக்ஷம் முன் வைத்திருந்தார். ராஜபக்ச குடும்பத்தினருக்கும் மிகவும் நெருக்கமானவரான ரஷ்யாவுக்கான முன்னால் தூதுவர் உதயங்க ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து ஒன்றில், கோட்டாபயவை கடுமையாக விமர்சித்திருந்தார். “கோட்டாபய நாடு திரும்பினார் மீண்டும் ஒரு கிளர்ச்சி ஏற்படலாம்” என்று ஒரு எச்சரிக்கையை அவர் விடுத்திருந்ததையும் காணக் கூடியதாக இருந்தது.
கோட்டாபாயவின் அனுபவமற்ற சில செயற்பாடுகளால் தான் ராஜபக்ச குடும்பம் அரசியலில் இருந்து ஒதுக்கப்படும் நிலைமை ஒன்று ஏற்பட்டிருந்தது. அவர் மீண்டும் நாடு திரும்பி அரசியல் ஈடுபடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் இதே போன்ற ஒரு நிலைமை ஏற்படலாம் என்ற ஒரு அச்சம் மஹிந்தவுக்கும் இருப்பதாக தெரிகின்றது. தன்னுடைய மகனை மீண்டும் அரசியலில் தீவிரமாக ஈடுபடுத்தி நாட்டின் தலைமை பதவிக்கு தயார்படுத்துவது என்ற இலக்குடன் செயல்பட்டு வரும் மஹிந்தவை பொறுத்தவரையில் இதனை அவர் விரும்ப மாட்டார். அவருடைய அண்மைக்கால கருத்துக்கள் கோட்டாபய மீண்டும் அரசியலுக்கு வருவதை அவா் விரும்பவில்லை என்ற கருத்தையே உணர்த்துகின்றது.
மறுபுறத்தில் ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்கமும் கோட்டாபய மீண்டும் வந்து அரசியலில் ஈடுபடுவதை விரும்ப மாட்டார். கோட்டாபய நாட்டை விட்டு வெளியேறி ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்ததன் பின்னரே அமைதியான ஒரு சூழ்நிலையை இலங்கையில் ஏற்படுத்தக் கூடியதாக இருந்தது. கோட்டா மீண்டும் திரும்பி பிரதமர் பதவியோ அல்லது முக்கியமான ஒரு எந்த ஒரு பதவியோ இலக்கவைத்து செயல்படுவாராக இருந்தால் அது ரணில் விக்கிரமசிங்காவுக்கு நெருக்கடியை கொடுக்கும். அதன் மூலமாக ஏற்படக்கூடிய ஸ்திரமற்ற தன்மை இலங்கைக்கு கிடக்கக் கூடிய சா்வதேச உதவிகளையும் பாதிக்கும். அதனால் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் கோட்டாபாய நாடு திரும்புவதை ஜனாதிபதி ரணில் அனுமதித்தாலும் கோட்டா தீவிரமான அரசியலை இறங்குவதை ரசிக்க மாட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
இதனைவிட கோட்டாவின் குடும்பத்தினரும் அவரது அரசியலால் நிறைய துன்பங்களை அனுபவித்துவிட்டனா். கோட்டா மீண்டும் அரசியலில் இறங்குவதை அவா்களும் ரசிக்கத் தயாராகவில்லை.
முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்குக் கொடுக்கப்பட வேண்டிய சிறப்புச் சலுகைகள் கோட்டாவுக்கும் வழங்கப்படுமா என்பதும் சா்ச்சைக்குரியதாகவே இருக்கின்றது. இரண்டரை வருடத்தில் தப்பிச் சென்று பதவி துறந்த ஒருவா் அந்த சலுகைகளுக்கு உரித்துடையவரல்ல என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. அதனால், அவருக்கான உத்தியோகபுா்வ வீடு, காதுகாப்பு என்பன நீதிமன்றத்தின் மூலம் கேள்விக்குள்ளாக்கப்படலாம்.
ஆக, நிம்மதியாக துாங்கக்கூட முடியாத ஒருவராகத்தான் கோட்டாவின் எதிா்காலம் அமையப்போகின்றது.
இந்தப் பின்னணியில் கோட்டா நாடு திரும்பினாலும் அவர் மீண்டும் அரசியலில் ஈடுபடுவாரா என்பதும், அரசியலில் ஈடுபட்டால் அதற்கான பிரதிபலிப்புகள் எவ்வாறானதாக அமையும் என்பதும் கேள்விக்குறியாக இருக்கும்!