கட்சித் தலைமை பிரச்சினைக்கு இந்த வாரத்துக்குள் தீர்வு; ரவி கருணாநாயக்க

438 Views

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவப் பிரச்சினைக்கு இந்த வாரத்துக்குள் தீர்வு கிட்டும் என அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு மோதறைப் பகுதியில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த அவர், அரசியல் கட்சி என்ற ரீதியில் ஐ.தே.க. எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு தயாராக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

தற்போது நாட்டின் பொருளாதாரம் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகத் தெரிவித்த ரவி கருணாநாயக்க, இது அண்மையில் இடம் பெற்ற விடயம் இல்லை எனவும் கூறினார்.

நாட்டின் பொருளாதாரத்தைச் சக்திமிக்கதாக மாற்ற முயற்சித்தபோதும் அது வீழ்ச்சியடைந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply