கடல் கட்டைப் பண்ணைகளை சட்டவிரோதமாக அனுமதித்த பூநகரி பிரதேச செயலர் அரச அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

90 Views

கிராஞ்சி இலவன்குடா கிராமத்தினை வாழ்விடமாகக் கொண்டு பாரம்பரிய மீன்பிடித்துறை யில் காலம் காலமாக ஈடுபட்டு வரும் மக்கள் இப்பிரதேசத்தில் சடுதியாகப்பாரியளவில் நிறுவப் பட்டு வரும் கடல் அட்டைப்பண்ணைகளுக்கு எதிராக நீண்ட நாட்களாக ஆர்ப்பாட்டங்கள், கவனயீர்ப்புப்போராட்டங்களில் ஈடுபட்டு வரு கின்றார்கள்.

சட்ட முறைகளைப்பின்பற்றாமலும் வழி முறைகளுக்குட்படாமலும் அரசியல் பின்புலத்தினை காரணமாக வைத்து கடந்த வருடத்திலிருந்து நிறுவப்பட்டு வரும் கடல் அட்டைப்பண்ணைகள் யாழ்குடாநாட்டிலும் பூநகரி, கிராஞ்சி பிரதேசத்திலும் குறிப்பாக சாதரண மக்களின் வாழ்வாதாரத்தினை நாசமாக்கிப் பெருமளவில் இலாபமீட்டுவதனை ஒரே நோக்கமாக கொண்டு இப்பண்ணைகள் நிறவப்பட்டுவருவதனால் இப்பிரதேச மக்கள் சொல்லொணா துயரத்திற்க உள்ளாகி வருவதுடன் பாரம்பரியமாக செய்துவரும் தொழில் முறைகளை இழந்து நிற்கதிக்குள்ளாகியிருக்கின்றார்கள்.

இப்பிரதேச மக்களின் வாழ்கை முறைகளையும் பாரம்பரியத்தையும் கருத்திற்கொள்ளாத வெளி யாட்கள், பல்தேசிய கம்பனிகள், வெளிநாட்டு முதலீட் டாளர்கள் புலம்பெயர் வணிகர்கள் ஆகியவர்கள் பலம்பொருந்திய அரசியல் வாதிகளின் ஆதரவுடன் இவற்றினை செயற்படுத்துவதனால் பொதுமக்களின் நலன்களை பாதுகாக்கும் கடமையைக்கொண்ட அரச அதிகாரிகளும் இதற்கு விலைபோயிருப்பது கவலைக்குரிய விடயமென்று பொதுமக்களால் கருதம்ப்படும் நிலையில் பொதுமக்கள் நடாத்தும் போரட்டங்களும் செவிடன் காதில் ஊதிய சங்காக இருந்து வருவதனால் அவதியுற்ற மக்கள்   தங்களின் இறுதி பிரயத்தனமாக நீதிமன்றினை நாடி ஒரு வழக் கினை தாக்கல் செய்துள்ளார்கள்.

பூநகரி பிரசே செயலர்,தேசிய நீர்; உயிரினவளாப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கரையோர நீர் வாழ் உயிரின விரிவாக்கல் பிரிவின் கிளிநொச்சி பிரதேசத்தின் உதவிப்பணிப்பாளர், கடற்தொழில் நீரியல்வள திணைக்களத்தின் கிளிநொச்சி பிரதேச உதவிப்பணிப்பாளர், கரையோர பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களத்தின் யாழ்ப்பாண மற்றும் கிளிநொச்சி பிரதேசத்திற்கான பிரதேச பொறியியலாளர், கரை யோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களத்திற்கான அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகிய அரச திணைக்களங்களுக்கும் அரச  உத்தியோகத்தர்ளுக்கும் எதிராக கிராஞ்சி இலவன் குடா கிராமத்தில் வசிப்பவர்களும் கடற்தொழில் ஈடுபடுவர்களுமான மூன்று மனுதாரர்கள் இவ் வழக் கினை தாக்கல் செய்துள்ளார்கள்.

இவ் வழக்கில் சட்டத்திற்கு புறம்பாகவும் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டும் கடல் அட்டைப்பண்ணையாளர்களுக்கு சார்பாகவும் நடவடிக் கைகள் எடுத்ததன் மூலமும் அப்பிதேச மக்களின் உரிமைகளையும் தேவைகளையும் கருத்திற் கொள்ளாது தேசிய உயிரின அபிவிருத்தி அதி காரசபை சட்டம் ((NAQDA), கடற்தொழில் நீரியல்

வளச்சட்டம், கரையோரம் பேணல் சட்டம், அரசகாணி கட்டளைச்சட்டம், தேசிய கடல்வளங்கள் ஆராட்சி அதிகாரசபைச்சட்டம் (NARA) மற்றும் கட லோர அபிவிருத்திச்சட்டம் ஆகிய சட்டங்களின் ஏற்பாடுகளுக்கு முரணாக அரச அதிகாரிகள் செயற்பட்டுவருகின்றார்கள் எனவும் இவ் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதானமாக பூநகரி பிரதேச செயலக அலுவலர்கள் விதிமுறைகளை மீறி தான்தோன்றித்தனமாக அரச காணிகள் என்ற போர்வையில் கடற்தரை நிலங்களை வெளியாட் களுக்கும் பன்நாட்டு கம்பணிகளுக்கும் தாரைவார்த்து கொடுத்தது மட்டுமல்லாமல் அதுக்காகவே ஒரு விழாவை நடாத்தி கடற்தொழில் அமைச்சரே 82 நபர்களுக்கு இவ் அளிப்பினை வழங்குவதற்கு பூநகரி பிரதேச செயலகம் நடவடிக்கை எடுத்திருந்தது என்பது இம் மனுவில் குறிப் பிடப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக மனிதஉரிமை ஆணைக்குழுவின் முன்னால் நடந்த விசாரணையில் மேற்குறித்த உத்தியோகத்தர்கள் கிராஞ்சி பிரதேசத்தில் சட்டரீதியற்ற விதத்தில் நிறுவப்பட்டுள்ள கடல் அட்டைப் பண்ணைகளை அகற்றுவதற்கு வாக்குறுதி யளித்தபோதிலும் அவ்வாறு செய்யப் பட வில்லை  என்று இவ் மனுவில் சுட்டுக் காட் டப்பட்டுள்ளது. மேற்படி சட்டரீதியற்ற முறையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை உடனே நிறுத்துமாறும் விதிமுறைகளுக்கு அப்பால் அளிக்கப்பட்ட உரி மங்களை இரத்துச் செய்யுமாறும் கடல்  அட்டைப் பண்ணைகள்  அமைப்பதனை  உடனடியாக  நிறுத்துமாறும்,  உறுதிகேள் எழுத்தாணை,ஆணையிட்டெழுத்தாணை, தடையீட் டெழுத்தாணை ஆகிய எழுத்தாணைகளை நிவாரணமாக கோரி இவ் மனுவினை தாக்கல் செய்துள்ளார்கள்.

இம்மனுவினை நீதிமன்றத்தில் ஆதரித்து மேற்கொள்ளப்பட்ட சமர்பணங்களை பரிசீலணை செய்த வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்கள் மேற்குறித்த மனுவில் விதிக் கப்பட்ட விடயங்களுக்கு மன்றில் தோன்றி விளக்கமளிப்பதற்கும் இவ் மனுவில் கோரப்பட்ட நிவாரணங்களை ஏன் வழங்க கூடாது என்பதற்கான விளக்கத் தினை அளிப்vபதற்கு இவ் வழக்குகள் எதிர்மனுதாரர்களாக குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து உத்தியோகத்தர்களையும் மார்ச் மாதம் 22 ஆம் திகதி மன்றில் சமூகமளிக்கமாறு கட்டளை விடுத்துள்ளர். இம் மனுவினை ஆதரித்து சிரேஷ்ர சட்டத்தரணி இரத்தினவேல் அவர்கள் சட்டத்தரணி மதுஞ்சுளா கேதீஸ்வரன் மனு மதரார் சார்பில் மன்றில் தோன்றினார்

Leave a Reply