ஏழு தீர்மானங்களிலும் இந்தியா பங்குதாரர் – ஐ.நா பிரதிநிதி

சிறீலங்காவில் 2009 ஆம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட 7 தீர்மானங்களிலும் இந்தியா முக்கிய பங்குதாரராக இருந்தது என ஐ.நாவுக்கான இந்திய பிரதிநிதி இந்திரா மணி பான்டே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இது வரை 7 தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தினதும் வரைபின் போதும் இடம்பெற்ற கலந்துரையாடல்களில் இந்திய பங்குபற்றியிருந்தது. கடந்த ஜனவரி மாதம் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையையும், அவரின் உரையையும் இந்தியா கருத்தில் எடுக்கும்.

எனினும் நாம் இரு தூண்களிற்கு இடையில் சமனிலையில் பயணிக்க விரும்புகின்றோம். சிறீலங்காவின் ஒருமைப்பாடு மற்றும் இறைமையை காப்பாற்றியவாறு தமிழ் மக்களின் அபிலாசைகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது தொடர்பில் சிந்தித்து வருகின்றோம்.

ஜெனீவா விவகாரத்தில் எமது நிலையில் மாற்றமில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.