எளிமையாக நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன் வேட்பாளர் பரிந்துரை நிகழ்வு

298 Views

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ட்ரம்ப் ஐ அறிவிக்கும் நிகழ்வு மிகவும் எளிமையாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ட்ரமப் போட்டியிடுகின்றார். ஜனநாயக கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால், தேர்தல் பிரச்சார வேலைகள் மந்தமாகவே உள்ளன.

இதேவேளை குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் ஐ முறைப்படி பரிந்துரை செய்வதற்காக, அந்தக் கட்சியின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டம் வடக்கு கரோலினாவில் சார்லேட் நகரில் எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதில் கட்சி பிரதிநிதிகள் ஒன்றிணைந்து டர்ம்ப் ஐ அதிபர் தேர்தலுக்கான வேட்பாளராக முறைப்படி பரிந்துரை செய்வார்கள்.

மேலும் இந்நிகழ்வுகள் வழமையாக மிகப் பிரமாண்டமாக நடைபெறும். ஆனால் இம்முறை பத்திரிகையாளர்கள் கலந்து கொள்வார்கள்.  ஆனால் இம்முறை பத்திரிகையாளர்கள் இல்லாமல் மிக எளிமையாக இந்தக் கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதிபர் தேர்தல் வரலாற்றில் வேட்பாளர் பரிந்துரை நிகழ்வு பத்திரிகையாளர்கள் இல்லாமலும், எளிமையாகவும் நடப்பது இதுவே முதன்முறையாகும்.

Leave a Reply